ஆதார் விவரங்களை பாதுகாக்க எளிய வசதி அறிமுகம் – “மாஸ்க் ஆதார்” முழு விவரம்!

0
ஆதார் விவரங்களை பாதுகாக்க எளிய வசதி அறிமுகம் -
ஆதார் விவரங்களை பாதுகாக்க எளிய வசதி அறிமுகம் - "மாஸ்க் ஆதார்" முழு விவரம்!
ஆதார் விவரங்களை பாதுகாக்க எளிய வசதி அறிமுகம் – “மாஸ்க் ஆதார்” முழு விவரம்!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு முக்கிய அடையாள ஆவணமான ஆதார் அட்டையை, ஒரு சிலர் தவறுதலாக பயன்படுத்த கூடாது என்பதற்காக புதிதாக மாஸ்க் ஆதார் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை:

ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும் தனிப்பட்ட அடையாள எண் ஆகும். இந்த அட்டை 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண், பயோமெட்ரிக் மற்றும் புள்ளி விவர தரவுகளை கொண்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள எண் வசிப்பாளருக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகக் கூடிய இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும், எந்த நேரமும் ஆன்லைனில் சரிபார்க்க கூடிய 12 இலக்க எண் ஆகும்.

அக்.21 முதல் தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இந்நிலையில் வங்கி கணக்கு தொடங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் ஏதாவது மாற்றங்கள் இருந்த அதை எளிமையான முறையில் வீட்டில் இருந்தே செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அனைத்திற்கும் தேவைப்படும் இந்த ஆதார் அட்டையை விவரங்கள் பல நேரங்களில் தவறுதலாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

அதனால் ஆதார் ஆணையம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது சாதாரண ஆதார் அட்டையில் 12 இலக்க எண் வெளிப்படையாக இருக்கும். ஆனால் மாஸ்க் ஆதார் எனப்படும் புதிய வசதியில் கடைசி 4 எண்கள் மட்டுமே வெளிப்படையாக இருக்கும். அதாவது ஆதாரின் நம்பரின் முதல் 8 எண்கள் மாஸ்க் ஆதாரில் ‘xxxx-xxxx’ என பதிவு செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் உங்களது ஆதார் விவரங்களை தவறுதலாக பயன்படுத்த முடியாது.

மாஸ்க் ஆதார் பெற எளிய வழிமுறைகள்:
  • UIDAI வலைத்தளத்திற்குச் சென்று, ‘ஆதார் பதிவிறக்கம்’ என்ற ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
  • ஆதார் / விஐடி / பதிவு ஐடியின் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து Masked ஆதார் விருப்பத்தை டிக் செய்ய வேண்டும்.
  • திறக்கும் பக்கத்தில் தேவையான விரவங்களை உள்ளிட்டு ‘Request OTP’ கிளிக் செய்ய வேண்டும்.
  • பின், ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • அடுத்ததாக, OTP எண்ணை அதற்கான இடத்தில் டைப் செய்து, மாக்ஸ் ஆதாரை டவுன்லோட் செய்யலாம்.
  • தற்போது, நீங்கள் டவுன்லோடு செய்திருக்கும் ஆதார் கார்ட் பிடிஎஃப் வடிவத்தில் இருக்கும். அதனை திறந்திட, பாஸ்வேர்ட் அவசியம் ஆகும். அதை திறப்பதற்கான பாஸ்வேர்ட் உங்களின் மெயில் ஐடிக்கு வந்திருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!