மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வுடன் கூடுதல் சலுகைகள் – வெளியான தகவல்!

1
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வுடன் கூடுதல் சலுகைகள் - வெளியான தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வுடன் கூடுதல் சலுகைகள் - வெளியான தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வுடன் கூடுதல் சலுகைகள் – வெளியான தகவல்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை 3 சதவிகிதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் இனி DA மற்றும் DR தொகையை 31%வரை பெற்றுக்கொள்ள முடியும்.

DA உயர்வு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR ஆகியவற்றை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக கொரோனாவால் கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டதான DA தொகை கடந்த ஜூலை மாத தவணையுடன் திரும்ப கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA மற்றும் DR தொகை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

தேசிய பாதுகாப்பு படையில் (NDA) பெண்களும் சேர்ப்பு – 2022 மே நுழைவுத்தேர்வு!

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 3% DA மற்றும் DR உயர்வை கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இனி அரசு ஊழியர்கள் 31 சதவீதம் வரை DA மற்றும் DR பெற முடியும். இந்த உயர்வு தவிர, மத்திய அரசு ஊழியர்களுக்கு சில கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்பட இருப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.

அந்த வகையில் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) தொகையை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகிதத்திற்கு மேல் DA அதிகரிக்கும்போது HRA தானாகவே அதிகரிக்கப்படும். மேலும் 2% குடும்ப ஓய்வூதிய வரம்பு ரூ. 45000 முதல் 1.25 லட்சம் வரை அதிகரிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை ஆதரிப்பதற்காக இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

தமிழகத்தில் ரூ.50,000க்கு அதிகமாக கொண்டு சென்றால் பறிமுதல் – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

இது தவிர சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கு மலிவான வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதற்காக, வீடு கட்டும் முன்பணத்தை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் பணவீக்கத்தை எதிர்த்து போராடுவதற்காக கூடுதல் DA உயர்வை அரசு வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக DA உயர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில்என்ற இரண்டு முறை கணக்கிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஆயிரம்
    ரூபாய்
    Epf pension
    வாங்கும்
    மூத்த குடிமக்களை
    அவர்களின்
    வாழ்வாதாரத்தை
    அவர்களின்
    சுயமரியாதையை
    உறுதி செய்ய
    Epf pensanai
    உயர்த்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!