மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 3% DA & HRA அதிகரிப்பு! இம்மாதம் அமல்?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - 3% DA & HRA அதிகரிப்பு! இம்மாதம் அமல்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - 3% DA & HRA அதிகரிப்பு! இம்மாதம் அமல்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 3% DA & HRA அதிகரிப்பு! இம்மாதம் அமல்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் இரட்டை போனஸுடன் 3% HRA தொகை அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த கொடுப்பனவுகள் மூலம் அரசு ஊதியர்கள் பெறும் மொத்த தொகை குறித்த விளக்கங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

HRA உயர்வு

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உருவான கொரோனா பேரலை தாக்கத்தினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) தொகை கிட்டத்தட்ட 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த DA தொகையானது 11%மாக உயர்த்தப்பட்டு இந்த ஆண்டு ஜூன் மாத தவணையுடன் திரும்ப கொடுக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு அளிக்கப்பட்டால் அவர்களின் HRA தொகையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நவம்பர் 1 முதல் WhatsApp செயலி இயங்காது – ‘இந்த’ போன்களில் மட்டும்! பயனர்கள் அதிர்ச்சி!

அந்த வகையில் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் DA தொகையை அரசு அதிகரித்த பிறகு, அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை உதவித்தொகை (HRA) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான உத்தரவில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் படி DA மற்றும் HRA தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இதனிடையே ஏழாவது ஊதியக் குழு விதிகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 25% மதிப்பெண்ணை தாண்டும்போது HRA 3% அதிகரிக்கப்படும்.

அதே சமயம் DA தொகை 25%ஐ தாண்டும் பட்சத்தில் HRA தொகையும் தானாகவே திருத்தப்படும் என்று கடந்த 2017ம் ஆண்டு செலவுத் துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது. இப்போது ஊடக அறிக்கைகளின் படி, திருத்தப்பட்ட HRA இந்த மாத சம்பளத்துடன் வழங்கப்பட இருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மத்திய அரசு ஊழியர்கள் அவர்கள் வாழும் நகரத்தின் வகைக்கு ஏற்ப HRA தொகையை பெறுகிறார்கள். அந்த வகையில் X வகை நகரங்களில் வசிப்பவர்களுக்கு, HRA 27% ஆகவும், Y மற்றும் Z பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு, HRA முறையே 18% மற்றும் 9% ஆக உயர்த்தப்படும்.

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஆஸி அங்கீகாரம்!

இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் அடங்கும். மேலும் 5 லட்சத்துக்கும் அதிகமான மற்றும் ஐந்து லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் முறையே Y மற்றும் Z நகரங்களில் பிரிக்கப்பட்டுள்ளன. இப்போது நுழைவு மட்டத்தில் (நிலை 1) மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 தொடங்கி ரூ.56,900 வரை கொடுக்கப்படுகிறது. இதில் 28% DA விகிதத்தில், ரூ.18000 அடிப்படை ஊதியமாக கொண்ட ஊழியர்கள் ரூ.5040 அளவு DA தொகையை பெறுகின்றனர். இந்த தொகை முன்பு ரூ.3060 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!