நவம்பர் 1 முதல் WhatsApp செயலி இயங்காது – ‘இந்த’ போன்களில் மட்டும்! பயனர்கள் அதிர்ச்சி!

0
நவம்பர் 1 முதல் WhatsApp செயலி இயங்காது - 'இந்த' போன்களில் மட்டும்! பயனர்கள் அதிர்ச்சி!
நவம்பர் 1 முதல் WhatsApp செயலி இயங்காது - 'இந்த' போன்களில் மட்டும்! பயனர்கள் அதிர்ச்சி!
நவம்பர் 1 முதல் WhatsApp செயலி இயங்காது – ‘இந்த’ போன்களில் மட்டும்! பயனர்கள் அதிர்ச்சி!

முன்னணி நிறுவனமான WhatsApp பயனர்களுக்கு பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த அப்டேட்கள் ஏற்றுக்கொள்ளப்படாத பழைய வெர்ஷன் மொபைல் போனில் நவம்பர் 1 முதல் WhatsApp சேவை நிறுத்தப்படுகிறது.

WhatsApp செயலி:

உலகம் முழுவதும் பயனர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் தொலைத்தொடர்பு செயலி WhatsApp. இந்த நிறுவனமானது பயனர்களுக்காக அடிக்கடி அப்டேட்களை வழங்கி வருகிறது. மேலும் பயனர்களுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பயனர்களுக்கு அடுத்தகட்ட தொழிநுட்பத்தை வழங்கும் முயற்சியில் WhatsApp நிறுவனம் இயங்கி வரும் நிலையில் பழைய வெர்ஷன் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அப்டேட் ஏதும் பயன்படாது.

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஆஸி அங்கீகாரம்!

எனவே பழைய மொபைல் போன்களுக்கு தனது சேவையை வழங்குவதை நிறுத்தி வருகிறது WhatsApp நிறுவனம். அதனை தொடர்ந்து இந்த ஆண்டில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல், 4.0.3 அல்லது அதைவிட குறைவான இயங்குதளம் கொண்ட மொபைல் போன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை WhatsApp நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இது பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் Airtel நிறுவனம் ரூ.5000 கோடி முதலீடு – ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு!

அதேபோல் 9 அல்லது அதற்கு குறைவான ஐ.ஓ.எஸ்-களைக் கொண்ட ஆப்பிள் ஐ-போன்களிலும் நவம்பர் ஒன்று முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஐ-போன் எஸ்.இ., ஐ-போன் 6 எஸ், ஐ-போன் 6 எஸ் பிளஸ் ஆகியவற்றில் இனி வாட்ஸ்அப் செயலி இயங்காது. பயனர்கள் தங்களது மொபைல் போனில் Operating System ஐ அப்கிரேட் செய்யும் பட்சத்தில் அவர்களால் தொடர்ந்து WhatsApp செயலியை பயன்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!