சென்னையில் Airtel நிறுவனம் ரூ.5000 கோடி முதலீடு – ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு!

0
சென்னையில் Airtel நிறுவனம் ரூ.5000 கோடி முதலீடு - ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு!
சென்னையில் Airtel நிறுவனம் ரூ.5000 கோடி முதலீடு - ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு!
சென்னையில் Airtel நிறுவனம் ரூ.5000 கோடி முதலீடு – ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு!

ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான நெக்ஸ்ட்ரா வரும் காலங்களில் தங்களின் திறனை அதிகரிப்பதற்காக சென்னையில் ரூ.5,000 கோடி முதலீட்டில் புதிய டேட்டா சென்டரை தொடங்க திட்டமிட்டுள்ளது.

அதிக வேலைவாய்ப்பு:

நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதிக கடன் சுமையால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது ஏஜிஆர் நிலுவையை செலுத்த 4 வருடம் அவகாசம் அளித்துள்ளது. மேலும், மற்ற நிறுவனங்கள் 100% தொலைத் தொடர்பு துறையில் நேரடி முதலீடுகளை செலுத்துவதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனம் தனது துணை நிறுவனத்தின் மீது அதிக முதலீட்டை செலுத்த முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆவடி, தாம்பரத்திற்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் – அரசு உத்தரவு!

இதற்காக ஏர்டெல் நிறுவனம் அதன் துணை நிறுவனமான நெக்ஸ்ட்ராவின் டேட்டா சென்டர் மையங்களை ரூ.5,000 கோடி முதலீட்டில் தொடங்க முடிவு செய்துள்ளது. இதற்காக 7 ஹைப்பர்ஸ்கேல் வளாகங்களை அமைக்கவும், தற்போது இயங்கி வரும் 35% பசுமை ஆற்றலை 50% ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏர்டெல் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டேட்டா சென்டர்களை விரிவுபடுத்த ரூ.5,000 கோடி முதலீடு செய்ய உள்ளோம். இதனால் 70 நகரங்களை இணைக்கும் அமைப்பை உருவாக்க உள்ளோம்.

கிடுகிடுவென சவரனுக்கு ரூ.256 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!

மேலும், அடுத்த 6 மாதங்களில் டேட்டா சென்டர்களில் இருந்து 40 மெகாவாட் திறன் சேமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டேட்டா சென்டர்களை சென்னை, மும்பைம் புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் அமைக்க உள்ள நிலையில், சென்னையில் அக்டோபர் மாதம் முதல் இது செய்லபட உள்ளது. இதனால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். மும்பை நகரத்தில் அடுத்த 18 மாதங்களிலும், கொல்கத்தாவில் வரும் 2024ம் ஆண்டு முதலும் டேட்டா சென்டர்கள் செய்லபட தொடங்கும் என்று ஏர்டெல் பிசினஸ் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான அஜய் சிட்காரா அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!