2,200 ஆயுதப்படை காவலர்கள் தேர்தல் பணிக்கு மாற்றம் – கமிஷனர் அறிவிப்பு!!

0
2,200 ஆயுதப்படை காவலர்கள் தேர்தல் பணிக்கு மாற்றம் - கமிஷனர் அறிவிப்பு!!
2,200 ஆயுதப்படை காவலர்கள் தேர்தல் பணிக்கு மாற்றம் - கமிஷனர் அறிவிப்பு!!
2,200 ஆயுதப்படை காவலர்கள் தேர்தல் பணிக்கு மாற்றம் – கமிஷனர் அறிவிப்பு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிக்காக கடந்த 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்த காவலர்கள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை மாநகர ஆயுதப்படையில் உள்ள 2.200 காவலர்கள், காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் பணியிட மாற்றம்:

தமிழர்கள் சட்டப்பேரவை தேர்தல் வருகிற 2021 மே மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் பல அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. மிக முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் இல்லாமல் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

அரசுப்பள்ளி கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

எனவே தேர்தல் நடப்பதில் எந்த முறைகேடுகள் நடக்காமல் பாதுகாக்கவும், மக்கள் கொரோனா விதிகளை கடைபிடித்து தேர்தல் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கவும் காவல்துறை சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து காவல்துறை சார்பாக கடந்த 3 ஆண்டுகளாக ஒரே பணிமனையில் இஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை பிரிவில் பணியாற்றிய பலரை பணியிட மாற்றம் செய்வதற்குரிய பணிகள் நடைபெறுகிறது. இதற்கு முன்னால் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சிறப்பு காவல் பணியில் பணிபுரிந்த 5004 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

பணியின் போது ஊனம் ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

தற்போது சென்னை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 2,200 காவலர்களை சென்னை மாநகராட்சியில் உள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மணடலங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணியிட மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர்தலுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்கள் அந்த உத்தரவை ரத்து செய்யவோ, வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவோ ஒரு ஆண்டு வரை மனு சமர்ப்பிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!