2024 – 25 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் வெளியீடு – CBSE வாரியம் தகவல்!

0

2024 – 25 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் வெளியீடு – CBSE வாரியம் தகவல்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் புதிய கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் வெளியிடுவது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்கள் வெளியீடு:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கான 2024 – 25 ஆம் கல்வியாண்டு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று தொடங்க உள்ளது. தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை கட்டாய பாடங்கள் ஆகவும், மூன்றாவது மொழியாக தமிழ் உட்பட உள்ளூர் மொழிகள மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடம், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை விருப்ப பாடங்களாக சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளியில் உயரும் மாணவர்கள் சேர்க்கை – எவ்ளோ தெரியுமா?

இதைத்தவிர 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9 பாடங்கள் உள்ளது. அவற்றில் ஐந்து கட்டாய பாடங்கள் ஆகவும், நான்கு விருப்ப பாடங்களாகவும், மூன்றாவது மொழியாக தமிழ் உட்பட 34 மொழிகளை தேர்வு செய்யும் வசதியும் உள்ளதாக சிபிஎஸ்சி வாரியம் தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து கலை, படிப்பு, உடல்நலம், தொழில் பயிற்சிகள் போன்ற உள் மதிப்பீட்டுக்கான பாடங்களை பள்ளிகளே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!