தமிழக அரசு பள்ளியில் உயரும் மாணவர்கள் சேர்க்கை – எவ்ளோ தெரியுமா?

0

தமிழக அரசு பள்ளியில் உயரும் மாணவர்கள் சேர்க்கை – எவ்ளோ தெரியுமா?

தமிழக அரசு பள்ளிகளில் 2024-25 ம் கல்வி ஆண்டில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையானது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதை தடுக்கவும் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே 2024-25 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்கான சேர்க்கையானது வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது.

அதிகாலையில் சென்னை மக்களுக்கு வந்த ஷாக் நியூஸ் – ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

இந்நிலையில் மார்ச் 1ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில் பெற்றோர்கள் பலர் ஆர்வமாக தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள தரவுகளின்படி 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 19 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் சேர்ந்து சேலம் முன்னிலை வகிக்கிறது. பொதுத் தோ்வு மற்றும் தோ்தல் பணிகள் முழுமையாக முடிந்தபின் மாணவா் சோ்க்கை பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!