ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஆகஸ்ட் மாதம் தொடங்கி உள்ள‌ நிலையில், நாக பஞ்சமி, வரமஹாலக்ஷ்மி விரதம், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளும் வர உள்ளன. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வங்கிகளுக்கு விடுமுறை:

ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது. இதற்கான விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளின் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், விடுமுறைப் பட்டியலை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே வங்கிகளில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விடுவது நல்லது. இந்த மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

Exams Daily Mobile App Download

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறைப் பட்டியலை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது. இதில் பேச்சுவார்த்தைக்கு ஏற்ற கருவிகள் சட்டம், நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை மற்றும் வங்கிகளின் கணக்குகளை மூடுவது ஆகியவை அடங்கும். அதாவது, தேசிய விடுமுறைகள் தவிர, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட சில மாநிலத்துக்கென்று குறிப்பிட்ட விடுமுறைகள் உள்ளன. இந்த வகையில் ஆகஸ்ட் 2022ல் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகளுக்கான இந்த 18 நாட்கள் விடுமுறை அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது அல்ல. மாநில அரசின் முடிவுகளுக்கு ஏற்பவும், கொண்டாட்டங்களுக்கு ஏற்பவும் விடுமுறை மாறுபடும். அதேசமயம், பொதுத்துறை, தனியார் வங்கிகள் இந்த 18 நாட்கள் விடுமுறையில் இருந்தாலும், ஆன்-லைன் வங்கிச் சேவை தொடர்ந்து செயல்படும். இந்த 18 நாட்கள் விடுமுறையில், 6 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன, 3 சனிக்கிழமைகள் வருகின்றன. இந்த வகையில் 9 நாட்கள் விடுமுறை வங்கிகளுக்கு கிடைத்து விடுகின்றன. மற்ற பண்டிகை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

  1. ஆகஸ்ட் 1: ட்ருக்பா ட்ஷே ஷி (கேங்டாக் – சிக்கிம் தலைநகர்)
  2. ஆகஸ்ட் 8: மொஹரம் (அஷூரா) – ஜம்மு, ஸ்ரீநகர்
  3. ஆகஸ்ட் 9: மொஹரம் (ஆஷுரா) – அகர்தலா, அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுடெல்லி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி
  4. ஆகஸ்ட் 11: ரக்ஷா பந்தன் – அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா
  5. ஆகஸ்ட் 12: ரக்ஷா பந்தன் – கான்பூர் மற்றும் லக்னோ
  6. ஆகஸ்ட் 13: தேசபக்தர் தினம் – இம்பால்
  7. ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் – இந்தியா முழுவதும்
  8. ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) – பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர்
  9. ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி – புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ
  10. ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி (Shravan Vad-8)/ கிருஷ்ண ஜெயந்தி — அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா
  11. ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி – ஹைதராபாத்
  12. ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி – கவுகாத்தி
  13. ஆகஸ்ட் 31: விநாயகர் சதுர்த்தி – அகமதாபாத், பேலாபூர், பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி
  14. வார இறுதி விடுமுறை நாட்கள்:
  15. ஆகஸ்ட் 7: முதல் ஞாயிறு
  16. ஆகஸ்ட் 13: இரண்டாவது சனிக்கிழமை மற்றும் தேச பக்தர் தினம்
  17. ஆகஸ்ட் 14: இரண்டாவது ஞாயிறு
  18. ஆகஸ்ட் 21: மூன்றாவது ஞாயிறு
  19. ஆகஸ்ட் 27: நான்காவது சனி
  20. ஆகஸ்ட் 28: நான்காவது ஞாயிறு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!