அரசு ஊழியர்களுக்கு விரைவில் 15% சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு விரைவில் 15% சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு விரைவில் 15% சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு விரைவில் 15% சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

நேபாளத்தில் பட்ஜெட் அறிக்கையில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 15 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அரசு ஊழியர்கள், ராணுவம், போலீசார் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பொது சேவையில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையிலும் அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜனார்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வு:

நேபாளத்தில், 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் ஜனார்தன் சர்மா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் அரசு ஊழியர்களின் தற்போதைய சம்பளம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இராணுவம், போலீஸ், ஆசிரியர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் சம்பளம் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புதிய உயர்வின் படி, தலைமைச் செயலருக்கு ரூ.67,140 சம்பளத்திலிருந்து ரூ.77,211 ஆக சம்பளம் உயரும்.

Exams Daily Mobile App Download

அதாவது அவர்களின் சம்பளம் ரூ.10,07 அதிகரித்துள்ளது. அதேபோல், செயலாளரின் சம்பளமும் ரூ.9,402 உயர்த்தப்படும். முன்பு ரூ.62,680 பெற்று வந்த செயலாளரின் சம்பளம் தற்போது ரூ.72,082 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இணைச் செயலாளர் சம்பளம் ரூ.49,380ல் இருந்து ரூ.56,787 ஆக உயர்ந்துள்ளது. அதாவது சம்பளத்தில் ரூ.7,407 உயர்வு இருக்கும். அதேபோல் புதிய சீரமைப்பின்படி, துணைச் செயலாளர் சம்பளம் ரூ. 48,737.ஆக இருக்கும். அதேபோல், ஒரு பிரிவு அதிகாரியின் சம்பளம் ரூ. 5,698 அதிகரித்து ரூ.43,688 ஆக கிடைக்கும்.

தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தற்போது அதிகாரிக்கு ரூ.37,990 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நயாப் சுப்பா (அரசித்தர் அல்லாத முதல் வகுப்பு அதிகாரி) அதிகாரிகள் சம்பளம் ரூ.4,530 அதிகரித்த பிறகு ரூ.34,730 சம்பளம் கிடைக்கும். நயாப் சுப்பாவின் தற்போதைய சம்பளம் ரூ.30,200 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹரிதாரின் சம்பளம் தற்போது ரூ.32,901ஐ எட்டியுள்ளது. முன்னதாக, அவரது சம்பளம் ரூ.28,610 ஆகும். மேலும் அரசு ஊழியர்களின் இந்த புதிய அகவிலைப்படி உயர்வு ஜூலை 17 முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து மத்திய அரசுப் பணியாளர் சட்டம் இயற்றப்படும், நிர்வாகச் செலவுகள் குறைக்கப்படும், நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்படும், நல்லாட்சி, சேவைத் திறன் அதிகரிக்கும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!