தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) 144 தடை உத்தரவு – ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!

0
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) 144 தடை உத்தரவு - ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) 144 தடை உத்தரவு - ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) 144 தடை உத்தரவு – ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!

தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம் ஆகும். அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க தலைஞாயிறு, மயிலாடுதுறையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

நாளை 144 தடை:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த பொதுமுடக்கத்தால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்த கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டறிப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் பலனாக தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 1891 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் மாஹூ என்ற பகுதியில் பீமாராவ் அம்பேத்கர் பிறந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்தியாவிலேயே மிகச்சிறந்த அணியாக தேர்வு!

சிறுவயதில் கனவுகளுடன் கல்வி கற்கச் சென்ற அம்பேத்கருக்கு,‌‌ தீயாய் தீண்டியது தீண்டாமை. புத்தகப் பையுடன் சாக்குப் பையையும் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்‌களின் கனவுகளையும் சுமந்து சென்றார் அம்பேத்கர். ‌தாழ்த்தப்‌பட்ட மக்களின் முன்னேற்றத்தை மூச்சாகக் கொண்டு கல்வி கற்ற அம்பேத்கர், வெளிநாட்டில் சட்டம், மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்‌டம் பெற்றார். படித்து முடித்து இந்தியா திரும்பிய அம்பேத்கர், தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்காக “பகிஷ்கரித் ஹித்தஹாரிணி” என்ற இயக்கத்தை தொடங்கினார். பின்பு சாதி வெறியால் சகித்து வாழும் மக்களுக்கு, தலைவனாக ஓய்வின்றி உழைத்தவர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில், அம்பேத்கர் உருவப்படம் தொடர்பாக எந்த பிரச்னையும் வராமல் இருக்க இன்று (ஏப்.13) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி இரு சமூகத்தினா் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் நாளை அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த இரு சமூகத்தினா் அனுமதி கேட்டிருந்தனா். இந்த நிகழ்வுகளால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், இன்று காலை 6 மணி முதல் 17-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தலைஞாயிறு மதகடி பகுதியிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 2 நபா்களுக்கு மேல் கூடிநிற்கக் கூடாது என மயிலாடுதுறை கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து ஐகோர்ட்டில் காவல்துறை தகவல் அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here