தமிழகத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழகத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழகத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துயிட்டுள்ளார். மேலும் துபாயில் இருந்து திரும்பிய முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் வேலைவாய்ப்பு குறித்த முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். அத்துடன் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்ததால் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியவில்லை தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 24ம் தேதி இரவு துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.

மீண்டும் டிவிக்கு வரும் இளைய தளபதி விஜய்? Beast படத்திற்காக புது முயற்சி! ரசிகர்கள் குஷி!

இதில் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர் அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்படி பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ளதாக தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துயிட்டுள்ளார். இதன் மூலம் பெரும்பாலோனோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது அரசு முறை சுற்று பயணத்தை நேற்று முடித்து கொண்டு தனி விமானம் மூலம் நள்ளிரவு 2.30 மணிக்கு சென்னை திரும்பினார்.

தமிழக முதல்வருக்கு சென்னை விமான நிலையத்தில் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, இந்த பயணத்தில் தமிழகத்திற்கு ரூ.6,100 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மேலும் இது போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தெரிவித்தார். அத்துடன் இந்த ஒப்பந்தங்கள் வெறும் காகிதமாக இல்லாமல் விரைவில் தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!