13 விருதுகளை வென்ற சன் டிவி “சுந்தரி” சீரியல் – நடிகை வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ!

0
13 விருதுகளை வென்ற சன் டிவி
13 விருதுகளை வென்ற சன் டிவி "சுந்தரி" சீரியல் - நடிகை வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ!
13 விருதுகளை வென்ற சன் டிவி “சுந்தரி” சீரியல் – நடிகை வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ!

சன் டிவியில் டாப் சீரியலில் ஒன்றான “சுந்தரி” சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை கேப்ரியல்லா, சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் விருது வாங்கியது பற்றி மனம் திறந்து பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர் சொன்ன தகவலின் படி சுந்தரி சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு 13 விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சன் குடும்ப விருதுகள்:

பல முன்னணி தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களுக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகளை ஊக்குவிக்கும் விதத்தில் சேனல் தரப்பில் இருந்து விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான சன் குடும்ப விருதுகளில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சுந்தரி சீரியல் பல விருதுகளை தட்டி சென்றுள்ளது. அது குறித்து சுந்தரி சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கேப்ரியல்லா மனம் திறந்து ரசிகர்களிடம் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாகும் முல்லை, மகிழ்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

அதன் படி சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் சுந்தரி சீரியலுக்கு 13 விருதுகள் கிடைத்துள்ளதாக பெருமையாக தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கின் போது TRPயில் பல ஏற்ற தாழ்வுகள் வந்தது ஆனால் அதை எல்லாம் கடந்து வந்து TRPயில் மாபெரும் சாதனை செய்து தற்போது இத்தனை விருதுகளை தட்டி செல்வது எல்லாம் ரொம்ப பெருமையான விஷயம் என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் அது நல்ல ஒரு தருணம் என தனது சந்தோசத்தை பகிர்ந்து இருக்கிறார்.

ExamsDaily Mobile App Download

மேலும் எல்லாரும் சேர்ந்து தான் இந்த வெற்றிக்காக உழைத்தோம் என சொல்லிய அவர் இன்னும் நிறைய விருதுகள் வாங்க வேண்டும் என முயற்சி செய்வதாக சொல்கிறார். பின் பேசிய அவர் இந்த அவார்ட் எல்லாம் சும்மா கொடுக்கவில்லை கடினமான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என சொல்லி வருத்தமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் இந்த சீரியல் குழுவினருக்கும் கேப்ரியல்லாவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!