தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! நாளை நேர்காணல்!

1
தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! நாளை நேர்காணல்!
தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! நாளை நேர்காணல்!
தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! நாளை நேர்காணல்!

கோவை அஞ்சல் கோட்டத்தில், ஆயுள் காப்பீடு நேரடி முகவருக்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்:

தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வருகினறனர். தற்போது தடுப்பூசிகளின் பயன்பட்டாலும், அரசின் முயற்சியாலும் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மீண்டும் பணியில் சேருவது என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.

Post Office இல் சேமிக்க தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறந்த 2 திட்டங்கள் இதோ!

அரசும் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அஞ்சல்துறையும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கோவை அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீட்டுக்கு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி ஆகிய காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.

திருச்சியில் நவ.19ம் தேதி அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

இந்த நேர்காணலானது நவம்பர் 18ம் தேதி அன்று காலை, 10 மணிக்கு கூட்ஸ் ஷெட் ரோடு, கோவை தலைமை அஞ்சல் நிலையம், கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மேற்கண்ட அஞ்சல துறை பணியிடங்களுக்கான 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களும் நேர்காணலில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு 0422 – 2558 541 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Hello mam / sir , I am ARAVINDH M from udumalpet. I have completed BSC( COMPUTER SCIENCE) IN GOVERNMENT ARTS AND COLLEGE. SO HOW CAN I APPLY WHICH POST IN POST OFFICE. PLEASE TELL US .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!