தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூ.1000 – நாளை அறிவிப்பு வெளியாகுமா?

0
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூ.1000 - நாளை அறிவிப்பு வெளியாகுமா?
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூ.1000 - நாளை அறிவிப்பு வெளியாகுமா?
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூ.1000 – நாளை அறிவிப்பு வெளியாகுமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அத்துடன் தற்போது சட்டசபையில் நாளை 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இதனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணி அளவில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் வேளாண்மைக்கு பட்ஜெட் தாக்கல் வருகிற சனிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

Post Office இல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 1 முதல் அமல்!

இதில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புது அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகள் பற்றியும் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் தாக்கல் செய்யபடலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நலத்திட்டங்களுக்கான நிதியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திமுக தனது அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்துள்ளது.

இதில் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் மாதம் தோறும் ரூ.1000 வழங்க வேண்டும் என்பதால் இத்திட்டத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதனால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். அதனால் அரசு இதனை ஆட்சியின் கடைசி ஓராண்டில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இத்திட்டத்தில் ஏதேனும் நிபந்தனைகள் கூட இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!