தமிழக காவல் துறையில் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு – தேர்வுக்கு தயாராக அதிகாரிகள் அறிவுரை!

0
தமிழக காவல் துறையில் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு - தேர்வுக்கு தயாராக அதிகாரிகள் அறிவுரை!
தமிழக காவல் துறையில் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு - தேர்வுக்கு தயாராக அதிகாரிகள் அறிவுரை!
தமிழக காவல் துறையில் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு – தேர்வுக்கு தயாராக அதிகாரிகள் அறிவுரை!

தமிழகத்தில் காவல்துறையில் தற்போது காவலர் பற்றாக்குறையும், கூடுதல் பணிச்சுமையும் தொடர்ந்து இருப்பதால் 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்யப்போவதாக தமிழக காவல் துறை சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள்:

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்த வகையில் முன்கள பணியாளர்கள் மருத்துவர்களை தொடர்ந்து காவல்துறை மக்களுக்காக அயராது உழைத்து வருகின்றனர். இப்போது ஊரடங்கு பிறப்பித்த நிலையிலும் இரவு, பகல் பாராமல் மக்களை பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக காவல் துறையில் 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் குற்றச் செயல்களை தடுக்க கடந்த 2021 ஜூன் 30-ம் தேதி தமிழக காவல் துறைக்கு 1,33,198 போலீஸார் அரசால் ஒப்பளிக்கப்பட்டது.

ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்வது எப்படி? முழு விபரங்கள் இதோ!

ஆனால், 1,18,881 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இதனை தொடர்ந்து காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக 11,813 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு 2020 செப்.17-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு 2020 ஆண்டு டிச.13-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

தமிழகத்தில் டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி, எலான் மஸ்க்கிற்கு அழைப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!

அதன் தொடர்ச்சியாக சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதையடுத்து அனைத்து தேர்வில் வெற்றி பெற்ற 10,391 பேருக்கு அடுத்த மாதம் முதல் 8 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதே போல, 969 காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வையும் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த வகையில் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதனால் தகுதியுள்ள இளைஞர்கள் இந்த கொரோனா காலகட்டத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!