தமிழகத்தில் டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி, எலான் மஸ்க்கிற்கு அழைப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!

0
தமிழகத்தில் டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி, எலான் மஸ்க்கிற்கு அழைப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!
தமிழகத்தில் டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி, எலான் மஸ்க்கிற்கு அழைப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!
தமிழகத்தில் டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி, எலான் மஸ்க்கிற்கு அழைப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!

தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு செய்வதற்காக அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அவர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

வாகன முதலீடு

அமெரிக்காவின் மின்சார வாகனம் மற்றும் எரிசக்தி நிறுவனமான டெஸ்லா மின்சார கார்களை வடிவமைத்து உற்பத்தி செய்து வருகிறது. இந்த டெஸ்லா நிறுவனமானது உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் முன்னணி வாகன உற்பத்தியாளராக திகழ்கிறது. கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் துவங்கப்பட்ட இந்த டெஸ்லா நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிப்பவர் எலான் மஸ்க்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லாவின் சேவைகளை உலகம் முழுவதிலும் ஈடுபடுத்த முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்தியாவில் இதுவரை டெஸ்லாவின் இயக்கத்திற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் டெஸ்லா நிறுவனத்தின் வருகைக்காக கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்து கிடக்கின்றனர். இதற்கிடையில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தை அமைக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக CEO எலான் மஸ்க் ஒரு சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு செய்வதற்காக எலான் மஸ்க் அவர்களுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தமிழகம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மொத்த திட்டமிடப்பட்ட முதலீட்டில் 34% பங்கை வகிக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தலைநகருக்கு உங்களை வரவேற்கிறோம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி DA உயர்வு 3% – விரைவில் அறிவிப்பு வெளியீடு!

உலகின் முதல் ஒன்பது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில் தமிழகமும் ஒன்று’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது அமைச்சரின் இந்த வரவேற்பை ஏற்று டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு முன்னதாக தெலுங்கானா, மஹாராஷ்டிரா மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் போன்ற பல்வேறு மாநிலங்கள் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை அமைக்க எலான் மஸ்க் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!