ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்வது எப்படி? முழு விபரங்கள் இதோ!

0
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்வது எப்படி? முழு விபரங்கள் இதோ!
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்வது எப்படி? முழு விபரங்கள் இதோ!
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்வது எப்படி? முழு விபரங்கள் இதோ!

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கார்டில் குடும்பத்தில் உள்ள அனைவரது பெயர்களும் இடம்பெற்றிருக்கும். இத்தகைய ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள் இருந்தால் அதனை ஆன்லைன் மூலம் செய்து கொள்ள முடியும்.

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்:

இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் பொருட்கள் வழங்கும் விதமாக ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய ரேஷன் கார்டு மூலம் மட்டுமே அரசின் அனைத்து செயல்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு வழங்குதலில் சில வரைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதாவது வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு பிங்க் ரேஷன் கார்டு, வறுமை கோட்டிற்கு மேலே இருப்பவர்களுக்கு வெள்ளை ரேஷன் கார்டு என வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி, எலான் மஸ்க்கிற்கு அழைப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!

இத்தகைய ரேஷன் அட்டையில் அந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் விபரங்கள் இடப்பெற்றிருக்கும். அவ்வாறு இருக்கும் உறுப்பினர்களின் பெயரை நீக்க வேண்டும் என்றால் முன்பு தாலுகா அலுவலகத்திற்கு செல்லவேண்டும். ஆனால் இப்போது தாலுகா அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்துகொள்ளலாம். அந்த வகையில் தமிழக ரேஷன் கார்டில் உள்ள பெயரை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் நீக்கம் செய்வது குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி?
  • முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • வலைதளத்தில் பயனர் நுழைவு என்பதை க்ளிக் செய்து, ரேஷன் கார்டில் இணைத்துள்ள மொபைல் எண்ணை அதில் பதிவிட்டு கேப்சா குறியீட்டை பதிவு செய்ய வேண்டும்.
  • அவ்வாறு பதிவு செய்த பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அத்தனையும் உள்ளிட்டு பதிவு செய் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் தோன்றும் பக்கத்தில் உங்கள் ரேஷன் அட்டை குறித்த அனைத்து விபரங்களும் தோன்றும். அதில் பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் உள்ள அட்டை பிறநிகழ்வுகள் என்பதை க்ளிக் செய்து, புதிய கோரிக்கை என்பதை கிளிக் வேண்டும்.

  • குடும்ப அட்டை எண், குறியீட்டு எண் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் சேவையை தேர்வு செய்யவும் என்பதை க்ளிக் செய்யவும்.
  • பின்னர் கொடுக்கப்பட்டிருக்கும் சேவை தேர்வுகளில் பெயரை நீக்க என்பதை தேர்வு செய்து, எதற்காக நீக்கம் செய்கிறீர்கள் என்ற காரணத்தை பதிவிட வேண்டும்.
  • அதாவது திருமணமான பெண் என்றால் அவர் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணம் 1 MB அளவில் இருத்தல் அவசியம். அந்த ஆவணத்தை பதிவேற்றம் செய்துவிட்டு உறுதிப்படுத்துதலை டிக் செய்து பதிவு செய்ய என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு 2 அல்லது 3 நாட்களில் ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கம் ஆகிவிடும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!