தமிழகத்தில் புதிதாக 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

1
தமிழகத்தில் புதிதாக 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் புதிதாக 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் புதிதாக 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு:

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பெரும் சரிவை கண்டதன் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் பலர் வேலை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நாளை (அக்.13) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு – மின்வாரியம்!

தற்போது திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் ரூ.1200 கோடி முதலீட்டில் தனியார் பங்களிப்புடன் “பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா” தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. புதுடில்லியில் இருந்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் ஜெயராம் கட்கரி அவர்கள் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் ஜெனரல் விகே சிங் ஆகியோர் கலந்து கொள்ள காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது இந்த நிகழ்வு.

மே 1 தொழிலாளர் தின விடுமுறை ரத்து? மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்!

இது குறித்து முதல்வர் கூறியதாவது, தமிழ்நாட்டில் அமையும் முதலாவது பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 158 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா அமையும் பகுதி மிக மிக முக்கியமான தொழில் பகுதியாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய முதல்வர் இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 10,000 இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Kanniyakumari to Chennai Kadalvazhi Inaippu salai Ammaital Yerpadum Nanmaikal Kattru minsaram koil inappu Velaivaippu suttrula moolam govtku varumanam kidaikum. Mattra manilamum vendum endral try panlam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!