10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு – அறிவிப்பு வெளியீடு!

0
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு - அறிவிப்பு வெளியீடு!
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு - அறிவிப்பு வெளியீடு!
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இணையதளம் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளும்படியான வசதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே பதிவு செய்யும் முறை கைவிடப்பட்டதாக சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அருகிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டிருந்தது.

Exams Daily Mobile App Download

மேலும், இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதுமே மதிப்பெண் சான்றிதழ்களுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இணையதளம் மூலமாகவே எளிமையாக வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: வாரத்தின் முதல் நாள் குறைந்த ஆபரணத் தங்க விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

அதாவது, வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்கிற இணையதள முகவரியின் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள இ- சேவை மையம் மூலமாகவோ அல்லது மாணவர்கள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு போன்ற தேவையான அனைத்து ஆவணங்களுடன் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சென்று வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!