சென்னை: வாரத்தின் முதல் நாள் குறைந்த ஆபரணத் தங்க விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: வாரத்தின் முதல் நாள் குறைந்த ஆபரணத் தங்க விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: வாரத்தின் முதல் நாள் குறைந்த ஆபரணத் தங்க விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: வாரத்தின் முதல் நாள் குறைந்த ஆபரணத் தங்க விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் நகைப்  பிரியர்கள், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தங்கத்தின் விலை நிலவரங்கள் குறித்து கீழே  உள்ள பதிவில் காணலாம்.

தங்கம் விலை:

தங்கம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். மக்களிடையே தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது எனலாம். இதற்கு காரணம் வீட்டில் நடக்கும்  ஒவ்வொரு நிகழ்ச்சியில் தங்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமின்றி ஒரு நாட்டில் உள்ள தங்கத்தை வைத்துத்தான் பணம் அச்சிடப்படுகிறது. அதற்கேற்றவாறு மக்களும் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து கொண்டே போகிறது. இந்தியாவிலேயே தென் ஆப்ரிக்காவில் தான் அதிகமான தங்கம் வெட்டி எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம், ஊரடங்கு போன்றவைகளால் நாட்டின் வருமானம் மிகவும் பின்தங்கி காணப்பட்டது. மேலும் பணவீக்கம் விலைவாசி உயர்வு ஆகியவற்றாலும் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற  உக்ரைன் போர் உலக நாடுகள் முழுவதும்  எதிர்பார்க்காத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.  இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு – மருத்துவக்கல்வி இயக்ககம்!
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.   இந்த மாதத்தின்  தொடக்கத்தில் ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதை தொடர்ந்து தங்கத்தின் விளையும் அதிகரிக்கத் தொடங்கியது. அதாவது இந்த ஒரு வார காலத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1000  அதிகரித்துள்ளது. இதற்கிடையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஆபரணத்  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.4,795-க்கு விற்பனை ஆகிறது. இதனை தொடர்ந்து வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 40 காசுகள் குறைந்து ரூ.63.30-க்கும், ஒரு கிலோ ரூ. 63,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை சட்டென்று குறைந்திருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here