தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

0
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாணவர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொதுத்தேர்வுகள்:

பொதுவாக தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்தில் பன்னிரண்டாம் வகுப்பிற்கும் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்புகளுக்கும் பொது தேர்வுகள் தொடங்கி நடத்தப்படும். ஆனால் கால தாமதமாக கல்வியாண்டு தொடங்கும் பட்சத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2023 – 24 ஆம் கல்வியாண்டு வழக்கம் போல் ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்கிவிட்டது. கல்வியாண்டின் ஆரம்பத்திலேயே பொதுத்தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணைகள் வெளியிடப்பட்டு விடும்.

இன்று முதல் விமான டிக்கெட் கட்டணம் ரூ.1000 வரை உயர்வு – பயணிகள் அவதி!

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 12ம் வகுப்புகளுக்கு மார்ச் 13ம் தேதியும், 10ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 6ம் தேதியும் தேர்வுகள் நடத்தப்படலாம் என்று உத்தேச தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கு முன்னதாக பொது தேர்வுகள் நடைபெறுமா? அல்லது தேர்தலுக்குப் பின் பொது தேர்வுகள் நடைபெறுமா? என்று மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு அட்டவணைகளை எப்போது வெளியிடும் என்று மாணவர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு தரப்பு வட்டாரங்களின் படி வரும் நவம்பர் மாதம் பொதுத்தேர்வு அட்டவணைகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!