Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – Work From Homeக்கு முடிவு!

0
Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - Work From Homeக்கு முடிவு!
Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - Work From Homeக்கு முடிவு!
Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – Work From Homeக்கு முடிவு!

இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான Infosys நிறுவனம் தற்போது பெங்களூரில் ஒரு புதிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. அதனால் தற்போது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களின் நிலை என்ன? என்று பார்ப்போம்.

ஊழியர்கள் கவனத்திற்கு

இந்தியாவில் கொரோனா காலத்திலும் ஐடி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள தனது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தினார். மேலும் கொரோனா பரவல் குறைந்த பிறகும் கடந்த 2 ஆண்டுகளாக சில தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அனுமதி அளித்தனர். சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்தால் ஊழியர்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். அத்துடன் மீண்டும் வற்புறுத்தினாலும் பணியை ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளனர்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு!

இதனால் பல ஐடி நிறுவனங்களின் அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் Infosys நிறுவனம் ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகையை பெரிய அளவில் குறைத்துள்ளது. அதன் காரணமாக தனது ஊழியர்களை இழந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பெங்களூரில் கடந்த சில வருடங்களில் யாரும் குத்தகைக்கு எடுத்திடாதவாறு மிகப்பெரிய அலுவலக இடத்தை எடுத்துள்ளது. இந்த இடம் சுமார் சுமார் 5 லட்சம் சதுர அடி கொண்டதாக உள்ளது. இந்த இடம் நார்த்கேட் பகுதியில் டெக் பார்க் பெங்களூர் விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

இதில் சுமார் 5000 பேர் பணியாற்றக்கூடிய அளவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் அலுவலகம் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக 3 அல்லது 6 மாத காலத்திற்குள் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில் தனது நிறுவனத்தில் புதிதாக 21,171 ஊழியர்களை சேர்த்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் 3.35 லட்சமாக உயர்ந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!