திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு!

திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே, பக்தர்கள் இத்தகவலை கவனித்து ஆர்ஜித சேவை டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்:

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் குறைவாகவும், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும், இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது நோய் தொற்று குறைந்துவிட்டதால் ஆன்லைன் கட்டண தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கான சிறப்பு அனுமதி – முன்பதிவு பெட்டிகளில் பயணம்!

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி ஆர்ஜித சேவைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்ள ஏப்ரல் 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை, மேல் சாட் வஸ்திரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முக்கிய செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் புதன்கிழமை (இன்று) காலை 10 மணியளவில் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது. மேலும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் புதன்கிழமை (இன்று) மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம். மேலும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் புதன்கிழமை (இன்று) மாலை 4 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here