Wipro நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – தகுதி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!

0
Wipro நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் - தகுதி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!
Wipro நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் - தகுதி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!
Wipro நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – தகுதி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!

இந்தியாவை சேர்ந்த முதன்மை IT மென்பொருள் நிறுவனமான விப்ரோ தனது ‘எலைட் நேஷனல் டேலன்ட் ஹண்ட்’ என்ற திட்டத்தின் கீழ் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணிக்கான தகுதி, விண்ணப்ப முறைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் கொரோனா பேரலை காரணமாக பலர் வேலை இழந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில், IT நிறுவனத்தில் மட்டும் புதிய வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வு தொடர்ந்து பெருகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த 2021-22 ஆம் நிதியாண்டு பல்வேறு IT பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது என கூறுவது மிகையாகாது. அந்த அளவுக்கு இந்திய மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது.

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்வோர் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்!

அந்த வரிசையில், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, 2022 இல் பட்டப்படிப்பை முடிக்கும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த வேலை வாய்ப்புகளை கொடுக்க உள்ளது. அதாவது இந்நிறுவனம் ‘எலைட் நேஷனல் டேலன்ட் ஹண்ட்’ என்ற திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 15க்குள் விண்ணப்பப் படிவங்களை செலுத்தியிருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகும். இப்பணிக்காக தகுதி, மதிப்பெண், பதவி உள்ளிட்ட சில விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதி:

  • B.E அல்லது B. Tech.
  • M.E அல்லது M. Techல் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு.
  • மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளை முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங், விவசாயம் மற்றும் உணவு தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருக்க கூடாது.

தேர்ச்சி விவரங்கள்: 2022

  • கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழக வழிகாட்டுதலின் படி, 60% அல்லது 6.0 CGPA மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
  • 10 ஆம் வகுப்பு: 60% அல்லது அதற்கு மேல்.
  • 12 ஆம் வகுப்பு: 60% அல்லது அதற்கு மேல்.

மதிப்பீட்டு செயல்முறை:

  • பதிவு, மதிப்பீடு, வணிக கலந்துரையாடல், இன்டென்ட் கடிதம், ஆபர் கடிதம்.
  • ஆண்டு இழப்பீடு: ரூ .3.5 லட்சம்.

பதவி:

  • திட்ட பொறியாளர் (Project Engineer)
  • சேவை ஒப்பந்தம்: ப்ரோ ரேட்டா அடிப்படையில் 12 மாதங்கள் ரூ.75,000 INR.

கூடுதல் அளவுகோல்:

  • கல்வியில் அதிகபட்சம் 3 வருட இடைவெளி அனுமதிக்கப்படுகிறது.
  • கடந்த ஆறு மாதங்களில் விப்ரோ நடத்திய எந்த தேர்வு செயல்முறையிலும் பங்கேற்ற வேட்பாளர்கள் தகுதியற்றவர்கள்.
  • விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • அல்லது PIO அல்லது OCI கார்டை வைத்திருக்க வேண்டும்
  • பூடான் மற்றும் நேபாள நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!