TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகுமா? முக்கிய தகவல்!

0
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகுமா? முக்கிய தகவல்!
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகுமா? முக்கிய தகவல்!
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகுமா? முக்கிய தகவல்!

கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகளுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்போது அறிவிக்கும் என தேர்வர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, தேர்வர்கள் முடிவுகளை எப்படி சரிபார்ப்பது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Group 2 & 2A தேர்வு முடிவுகள்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்இதற்காக போட்டி தேர்வுகள், நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அரசு பணிநிலைகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படும். இந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 21 ஆம் தேதி திட்டமிட்டபடி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் சுமார் 5529 காலிப்பணியிடங்களுக்கு, 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வில் 11 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

Exams Daily Mobile App Download

மேலும் சுமார், 1.83 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வின் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டும் எனவும், குரூப் 2-க்கான முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் என்றும் முன்னதாக tnpsc அறிவித்திருந்தது. மேலும் டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 மாதங்களில் இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC வெளியிட்ட உத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொண்டு உடனடியாக முதன்மைத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகலாம் என விண்ணப்பதாரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

10ம் வகுப்பு முடித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – ரூ.7,000/- உதவித்தொகை!

வகை               ஆண்களுக்கான கட் ஆப் மார்க்         பெண்களுக்கான கட் ஆப் மார்க்

பொதுப்பிரிவினர்      158-163                                                             155-160
BC                             153-158                                                             147-152
MBC                           151-156                                                             145-150
BC (M)                       147-152                                                             140-145
SC                             145-150                                                             147-152
SC (A)                        145-150                                                             138-143
ST                              145-150                                                             138-143

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்க்கலாம்:
  • முதலில் TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  • முக்கியமான இணைப்புகள் பிரிவின் கீழ் “latest results/Result declaration schedule” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • TNPSC முடிவுகள் குறித்த பல்வேறு அறிவிப்புகள் கிடைக்கும் பக்கத்திற்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.
  • அதில், 21.05.2022 அன்று நடைபெற்ற முதல்நிலைத் தேர்வுக்கான TNPSC குரூப் 2 முடிவை 2022 தேடவும்.
  • TNPSC Group 2 Result 2022 -க்கான இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் உள்நுழைவு விவரங்களை சமர்ப்பிக்கவும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் திரையில் கிடைக்கும். TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான உங்கள் தகுதி நிலையைப் பதிவிறக்கிச் சரிபார்க்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!