விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 6' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 6' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்!

கடந்த பிக் பாஸ் 5 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இடையிடையே ரம்யா கிருஷ்ணன், சிம்பு ஆகியோர் தொகுத்து வழங்கினர். தற்போது சீசன் 6 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க இருக்கிறார்கள் என்பது குறித்தான தகவல்கள் சமூக வலைப்பக்கங்களில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் அதிகமான ஆதரவை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரைக்கும் ஐந்து சீசன்கள் நிறைவடைந்துவிட்டது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். எப்படியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு தான் பிக் பாஸ் சீசன் 6 ஒலிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த 5 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இதற்கு இடையே கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் கமலுக்கு பதிலாக ஒரு வாரம் மட்டும் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதற்குப் பின்பு கமல் விக்ரம் திரைப்பட ஷூட்டிற்கு செல்ல இருப்பதால் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதற்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார். தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என பேச்சுவார்த்தை எழுந்துள்ளது.

விக்ரம் சூர்யாவிற்கு ‘ரோலக்ஸ்’ கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்த கமல் – வைரலாகும் புகைப்படம்!

கமலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட்டாக இருப்பதால் கமல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். தற்போது கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பல கோடி வசூலை அள்ளி வருகிறது. அடுத்தடுத்த திரைப்படங்களில் கமல் கமிட்டாக இருந்தாலும் கூட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலை காணவுள்ள மகிழ்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!