விக்ரம் சூர்யாவிற்கு ‘ரோலக்ஸ்’ கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்த கமல் – வைரலாகும் புகைப்படம்!

0
விக்ரம் சூர்யாவிற்கு 'ரோலக்ஸ்' கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்த கமல் - வைரலாகும் புகைப்படம்!
விக்ரம் சூர்யாவிற்கு 'ரோலக்ஸ்' கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்த கமல் - வைரலாகும் புகைப்படம்!
விக்ரம் சூர்யாவிற்கு ‘ரோலக்ஸ்’ கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்த கமல் – வைரலாகும் புகைப்படம்!

கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல ஹிட்டை கொடுத்ததால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கமல் ஒரு சொகுசு காரை பரிசாக வழங்கினார். இதனை அடுத்து நடிகர் சூர்யாவிற்கும் கமல் ஒரு கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

விக்ரம் திரைப்படம்:

மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது உலக நாயகன் கமலை வைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கினார். விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் அனைத்துமே ரசிகர்களின் நல்ல ஆதரவைப் பெற்றதால், திரைப்படமும் ரசிகர்களின் ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே ரசிகர்களின் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கோபி பற்றிய உண்மையை கண்டுபிடித்த பாக்கியா – சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

திரைப்படம் வெளியாகி மூன்றே நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்ததைவிட நல்ல ஹிட்டை கொடுத்ததால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கிட்டத்தட்ட 80 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கினார். மேலும், தன்னுடன் இணைந்து பணியாற்றிய படக்குழுவினருக்கும் பல பரிசுகளை வழங்கினார். விக்ரம் திரைப்படத்தில் மூன்று நிமிடங்கள் மட்டுமே ரோலக்ஸ் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து விட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்ற சூர்யாவிற்கும் தற்போது கமல் ரோலக்ஸ் என்னும் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

Exams Daily Mobile App Download

விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்ததற்கு சம்பளம் எதுவுமே வாங்கவில்லை. கமலுக்காக மட்டுமே இந்த திரைப்படத்தில் நடித்ததாக நடிகர் சூர்யா ஏற்கனவே அறிவித்திருந்தார். சூர்யாவின் கதாபாத்திரம் விக்ரம் திரைப்படத்தில் நல்லவிதமாக பேசப்பட்டு வருவதால் அடுத்து கமல் எடுக்க இருக்கும் திரைப்படத்தில் சூர்யாவை நடிக்க வைப்பதாக கமல் அறிவித்துள்ளார். கமல் பரிசளித்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இப்படி ஒரு தருணம் வாழ்க்கையையே மிகவும் அழகாய் மாற்றுகிறது. உங்களது ரோலக்ஸ்க்கு மிகவும் நன்றி அண்ணா என ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!