‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

2
'பாரதி கண்ணம்மா' சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணையும் அந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில், DNA டெஸ்ட் குறித்தும் ரசிகர்கள் தங்களது சந்தேகங்களை மீண்டுமாக எழுப்பியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கிட்டத்தட்ட 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சண்டை, பிரச்சனை என கடந்து வந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் மீண்டுமாக புத்துயிர் பெற்றுள்ளது. அதாவது கண்ணம்மா மற்றும் பாரதி, ஹேமா மற்றும் லட்சுமி குறித்த ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – கிளைமாக்ஸ் ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பல கட்ட முயற்சிக்கு பிறகு பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க சௌந்தர்யா குடும்பம் புது திட்டம் தீட்டியுள்ளது. அதாவது, வேணுவுக்கு நெஞ்சு வலி வந்தது போல நடித்து, இருவரையும் சேர்த்து வைக்கும் வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, நீண்ட நாட்களாக பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த DNA டெஸ்ட் குறித்து மீண்டுமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

என்னதான் சௌந்தர்யா, ஹேமாவை கண்ணம்மாவின் குழந்தை இல்லையன்று சொன்னாலும், அதை அவர் ஏற்றுக்கொள்வது போல் தெரியவில்லை. பாரதியும் ஒரு டாக்டராக இருக்க, அந்த DNA டெஸ்டை எடுக்க வேண்டியது தானே என ரசிகர்கள் தங்களது மனக்குமுறலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். என்றாலும், பாரதி கண்ணம்மா கதையில் தற்போதிருக்கும் ஒரு முக்கிய ரகசியம் என்னவென்றால், DNA டெஸ்ட் தான்.

தமிழகத்தில் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – அறநிலையத்துறை அறிவிப்பு!

இப்போது பாரதி, DNA டெஸ்ட் எடுத்தால் சீரியல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. அதனால் DNA குறித்த உண்மை இப்போதைக்கு வெளியே வராது என்பது ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களை சற்று வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இருந்தாலும் வேணுவின் திட்டத்தால் பாரதியும், கண்ணம்மாவும் இனி ஒரே வீட்டில் சேர்ந்து இருக்கும் சந்தர்ப்பம் அமைய இருக்கிறது. இதன் மூலம் இருவருக்கும் புரிதல் வந்து சண்டைகள் விலகலாம். இது கண்டிப்பாக ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. பாரதிகண்ணம்மா வரவர ரொம்ப கேவலமாக ரொம்ப போரடிக்குது அவங்க ஒன்று சேர்வார்களா ?இல்லையா? மக்களுக்கு ஒரு இன்ட்ரஸ்டா நல்ல ஒரு விறுவிறுப்பான எடுத்துட்டு போகணும் அதுதான் நாடகம் சும்மா பபுள்காம் மாதிரி போயிட்டு இருந்தா நாளைக்கு லைக் பண்ண மாட்டாங்க இப்ப சீரியலை Fasta ஓட்டித்தான் பார்க்கிறாங்க ஹாட்ஸ்டார்ல ஏனென்றால் அது அந்த நிலைமையில் தான் உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!