மத்திய அரசின் CUET நுழைவுத்தேர்வு முடிவுகள் எப்போது? UGC தலைவர் அறிவிப்பு!

0
மத்திய அரசின் CUET நுழைவுத்தேர்வு முடிவுகள் எப்போது? UGC தலைவர் அறிவிப்பு!
மத்திய அரசின் CUET நுழைவுத்தேர்வு முடிவுகள் எப்போது? UGC தலைவர் அறிவிப்பு!
மத்திய அரசின் CUET நுழைவுத்தேர்வு முடிவுகள் எப்போது? UGC தலைவர் அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான கியூட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இது குறித்து யுஜிசி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

கியூட் தேர்வு:

இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கியூட் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். நடப்பு கல்வியாண்டுக்கான கியூட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 31ம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்வானது கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 500 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 2 நகரங்களிலும் நடைபெற்றது. மேலும் இந்த தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற்றது.

மேலும் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் அதன் ,முடிவுகள் எப்போது என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி அல்லது அதற்க்கு 2 நாட்களுக்கு முன்பு வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (UCG) தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கான இணையத்தளத்தை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் தங்க விலை – கவலையில் நகைப்பிரியர்கள்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் நேற்று கியூட் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது. அத்துடன் தேர்வரின் OMR விடைத்தாளையும், இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகளையும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தேர்வர்கள் நாளை இரவு 11.50 மணிக்குள் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு செயல்முறை கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!