விஜய் டிவி “குக் வித் கோமாளி” பாலா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி" பாலா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி “குக் வித் கோமாளி” பாலா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் காமெடி நடிகர் பாலா, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கலக்கி வருகிறார். இந்நிலையில் பாலா பல ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து பாலா முதியோர்களுக்கு உதவி செய்வது போல வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

நகைச்சுவை நடிகர் பாலா:

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தன்னுடைய நகைச்சுவை திறமையால் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் பாலா. கலக்கப் போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் தன்னுடைய முழு திறமையை காட்டி அதில் டைட்டில் வின்னராக வெற்றி மகுடத்தை சூடிய பாலா தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார். 10 ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்த பாலா நடிப்பின் மீது இருந்த ஆசையால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

Exams Daily Mobile App Download

அதன் மூலம் அவருக்கு பல பட வாய்ப்புகளும் வந்தது. இவர் ஜுங்கா, தும்பா, காக்டெய்ல், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், 90ஸ் கிட்ஸ் vs 2கே கிட்ஸ், அது இது எது என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இப்போது வார வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாலாவின் நகைச்சுவையை பார்க்க பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் மூர்த்தி? ரசிகர்கள் ஷாக்! முழு விவரம் இதோ!

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் பாலா தன்னால் முடிந்த அளவிற்கு ஏழை எளிய குழந்தையின் படிப்பு செலவிற்கு உதவி செய்வதாக நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் காட்டப்பட்டது. அவர் இறப்பதற்குள் 100 குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டும் என தனது லட்சியத்தை தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் அவர் வயதான முதியவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அவர் மேலும் பலருக்கு உதவி செய்யும் அளவிற்கு வளர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!