கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் வருகின்ற ஜூன் 7ம் தேதி காலை 6 மணி அளவில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்ற சூழலில் கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கட்டாயம் நீட்டிக்கப்பட வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக வருகின்ற 7ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் தமிழக அரசு தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் கோவை மாவட்டத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் என்று கூறப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
காரணம் கடந்த ஒரு வார காலமாகவே தமிழகத்தில் ஏற்படும் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை மாவட்டம் முதல் இடத்தை பிடித்து வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு சுமார் 3 ஆயிரத்திற்கு அதிகமாக இருந்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி அன்று அங்கு 11,601 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 3,332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜூன் 4 முதல் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு!!
கோவை மாவட்டத்தில் தற்போது சுமார் 40 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அதில் 10 ஆயிரம் பேர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள், 28 ஆயிரம் பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெறுபவர்கள். கேரளாவில் இருந்து பல வழிகளில் கோவைக்கு மக்கள் வருவது தான் கொரோனா அதிகரிப்புக்கு கரணம் என்று கூறப்படுகிறது. கோவையில் உள்ள வங்கி, ரயில்வே போன்ற துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் கேரளாவில் இருந்து தங்களது சொந்த வாகனத்தில் வந்து செல்கின்றனர்.
தமிழகத்தில் மின்தடை ஒத்திவைப்பு – அமைச்சர் அறிவிப்பு!!
எனவே வருகின்ற 7ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்ற சூழலில் கோவை மாவட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கோவை மாவட்டத்திற்கு அளிக்காமல் இருந்தால் மட்டுமே தொற்று கட்டுக்குள் வரும் என்றும் கேரளாவில் இருந்து வரும் மக்களின் வருகையை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இது குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பது விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.