ஜூன் 4 முதல் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு!!

0
ஜூன் 4 முதல் கடைகளை திறக்க அனுமதி - ஜூன் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு!!
ஜூன் 4 முதல் கடைகளை திறக்க அனுமதி - ஜூன் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு!!
ஜூன் 4 முதல் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு!!

கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு குஜராத் மாநிலத்தில் ஜூன் 11 வரை 36 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜூன் 4 முதல் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

கொரோனா வைரஸ் தினசரி பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதால், குஜராத் மாநில அரசு அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 4 முதல் கடைகளை திறக்க அனுமதி அளித்து, ஜூன் 4 முதல் இரவு ஊரடங்கு உத்தரவை ஜூன் 11 வரை வரை நீட்டித்து உள்ளது. மேலும் மாநிலத்தின் 36 மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைகளும் ஜூன் 4 முதல் திறக்கப்படும் என்றும் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்தடை ஒத்திவைப்பு – அமைச்சர் அறிவிப்பு!!

தினமும் இரவு 10 மணி வரை உணவகங்கள் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 27 அன்று, 36 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை ஜூன் 4 வரை நீட்டித்து இருந்தது. மேலும் பகல் நேர கட்டுப்பாடுகளை அமல்படுத்தி, இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தை ஒரு மணி நேரம் தளர்த்தவும் மாநில அரசு முடிவு செய்திருந்தது. முந்தைய ஊரடங்கு உத்தரவில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இருந்த இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 4 வரை, 36 மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ssc

தற்போது, ​​ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள 36 நகரங்களில் அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகியவை அடங்கும். குஜராத்தில் (ஜூன் 2 நிலவரப்படி) இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,10,730 ஆகவும், பலி எண்ணிக்கை 9,855 ஆகவும் உள்ளன. இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,71,860 ஆக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!