TCS, Wipro, HDFC Bank, Deloitte நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH!

0
TCS, Wipro, HDFC Bank, Deloitte நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் WFH!
TCS, Wipro, HDFC Bank, Deloitte நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் WFH!
TCS, Wipro, HDFC Bank, Deloitte நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH!

இந்தியாவில் கொரோனா பேரலைக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட WFH முறை TCS, விப்ரோ, HDFC வங்கி மற்றும் டெலாய்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

WFH முறை

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோய் தொற்று வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் தடுப்பூசி செயல்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பல்வேறு நிறுவனங்கள் WFH முறையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கித்துறைகள் தங்களது ஊழியர்களை அலுவலகம் வரவழைக்க ஆலோசித்து வருகிறது. மறுபுறத்தில் நெஸ்லே, டாடா வணிக சந்தை, ஆம்வே, டாபர், கோத்ரெஜ் போன்ற சில முன்னணி நிறுவனங்கள் வீடு அல்லது அலுவலகத்திலிருந்து வேலையுடன் கலப்பின மாதிரியை பின்பற்ற முடிவு செய்துள்ளன.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – 11 குழுக்கள் ஆய்வு!

அதாவது இந்த நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் கணிசமான ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து இவ்வகை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக TCS தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், தனது நிறுவனத்தின் ஊழியர்களில் 90% பேரை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் அலுவலகங்களுக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இருப்பினும், 2025க்குள் TCS நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 25*25 மாதிரியை அமல்படுத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஓய்வு வயது குறைப்பு?

அதே போல விப்ரோ, இன்போசிஸ் போன்ற மற்ற IT நிறுவனங்களும் இந்த முறையை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இது குறித்த டெலாய்ட் கணக்கெடுப்பின்படி, பெரும்பான்மையான இந்தியர்கள் அதாவது 84% பேர் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்புவது பாதுகாப்பானது என்று உணர்வதாக கூறுகிறது. அதே நேரத்தில் TCS, விப்ரோ, இன்போசிஸ் போன்ற IT நிறுவனங்களைத் தவிர, வங்கி மற்றும் நிதித்துறையில் உள்ள சில முக்கிய நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் கணிசமான பேரை வேலைக்கு அழைக்க திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் கோடக் மஹிந்திரா வங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் 90 சதவிகித பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்க ஆலோசித்துள்ளது. இதனுடன் HDFC வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, யெஸ் வங்கி, டெலாய்ட் ஆகியவை அடுத்த இரண்டு மாதங்களில் 90 சதவிகித பணியாளர்களுடன் அலுவலகத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன. மேலும் விப்ரோ நிறுவனத்தின் தலைமைப் பதவியில் உள்ள 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் மட்டும் வாரத்திற்கு 2 முறை என்ற கணக்கில் அலுவலகத்திற்கு வருகை தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!