TCS, Wipro, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் வீட்டில் இருந்தே வேலை!

0
TCS, Wipro, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் வீட்டில் இருந்தே வேலை!
TCS, Wipro, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் வீட்டில் இருந்தே வேலை!
TCS, Wipro, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் வீட்டில் இருந்தே வேலை!

இந்தியாவில் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அனுமதிக்கப்பட்ட WFH கொள்கையை முடித்து விட்டு ஊழியர்களை அலுவலகம் வரவழைக்க பல்வேறு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தகவல் அளித்துள்ளது.

WFH கொள்கை

கொரோனா பரவல் தொற்றுக்கு மத்தியில் அலுவலகங்கள் தோறும் அறிமுகம் செய்யப்பட்ட வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கை நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் மற்றும் முதலாளிகளிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அந்த வகையில் சிலர் வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்பினாலும், குழுப்பணியை ஊக்குவிப்பதற்காக ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்று நிறுவனங்கள் கருதுகின்றன. உண்மையில், நிறுவனங்கள் ஹைப்ரிட் அல்லது வொர்க் ஃப்ரம் ஹோம் பாலிசிகளுக்கு பதிலாக அலுவலகத்தில் இருந்து வேலை செய்யத் தயாராக இருக்கும் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முன்வருகிறது.

தமிழக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அமல்? நிதியமைச்சரின் விளக்கம்!

அந்த வகையில் WFH கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள் அலுவலகங்களில் இருந்து வேலை செய்யத் தயாராக இருக்கும் நபர்களிடம் அதிக நாட்டம் காட்டுகின்றன. இது தொடர்பாக பணியாளர் நிறுவனமான டீம் லீஸ் சர்வீசஸின் இணை நிறுவனர் ரிதுபர்ணா சக்ரவர்த்தி கருத்துப்படி, ‘குழுப்பணி என்பது தொலைதூரத்தில் நடக்க முடியாது. தொற்று நோய்களின் போது இந்த வேலை கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நேரடி வருகை தேவைப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஏராளமான ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களை விட்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். இது அவர்களின் வாடகையைச் சேமிக்கவும் தங்கள் குடும்பங்களுடன் நெருக்கமாக இருக்கவும் உதவியது. சமீபத்திய டெக் டேலண்ட் அவுட்லுக் அறிக்கையின்படி, 80 சதவீத ஊழியர்கள் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்புகிறார்கள். அதாவது, அலுவலக மையங்களில் அதிக வாடகை, நீண்ட பயண நேரம், மாசுபாடு, குடும்பத்தை விட்டு விலகி இருப்பது போன்ற பல காரணிகள் WFH பணியை விரும்புவதற்கு பங்களிக்கின்றன. இப்போது தொழில்நுட்ப நிறுவனங்கள் WFH அல்லது ஹைப்ரிட் பணிக் கொள்கைகளுடன் மிகவும் வசதியாக செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ, காக்னிசன்ட், இன்ஃபோசிஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகம் வருவதற்கு தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அந்த வகையில் அவர்கள் அடுத்த மாத தொடக்கத்தில் அலுவலகங்களுக்கு அழைக்கப்படலாம். உண்மையில், ஐடி நிறுவனமான விப்ரோ, மேலாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ளவர்களை மார்ச் 3ம் தேதிக்குள் அலுவலகத்திற்கு திரும்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இப்போதைக்கு வாரத்தில் அவர்கள் இரண்டு நாட்களுக்கு அலுவலகம் செல்வார்கள் என தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!