மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீ – வனப்பகுதிகள் சேதம்… தீயை அணைக்கும் பணிகள் மும்பரம்!

0
மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீ - வனப்பகுதிகள் சேதம்... தீயை அணைக்கும் பணிகள் மும்பரம்!
மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீ - வனப்பகுதிகள் சேதம்... தீயை அணைக்கும் பணிகள் மும்பரம்!
மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீ – வனப்பகுதிகள் சேதம்… தீயை அணைக்கும் பணிகள் மும்பரம்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ 5 – வது நாளாக பற்றி எரிந்து வருகிறது. இத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டு தீ:

கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை அடுத்து உள்ள நாதே கவுண்டன் புதூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்து வருகிறது. இது குறித்து வனத்துறையினருக்கு உடனடியாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் இரவு பகலாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 19ம் தேதி வரை வாட்டி வதக்க போகும் வெயில் – வானிலை மையம் தகவல்!

கொழுந்துவிட்டு எரியும் இந்த தீயால் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து சேதமாகியுள்ளது கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்த இடங்களுக்கு தீ பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தீயை அணைக்க சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து விமானம் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 5 – நாளாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க உடுமலை பொள்ளாச்சி ஆனைமலை ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த வன பணியாளர்கள் சுமார் 150 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து தீயை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!