TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடக்கிறதா? தேர்வு வாரியத்தின் முக்கிய விளக்கம்!

0
TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடக்கிறதா? தேர்வு வாரியத்தின் முக்கிய விளக்கம்!
TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடக்கிறதா? தேர்வு வாரியத்தின் முக்கிய விளக்கம்!
TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடக்கிறதா? தேர்வு வாரியத்தின் முக்கிய விளக்கம்!

TNPSC குரூப் 4 தேர்வில் தட்டச்சு பிரிவில் ஒரே தேர்வு மையத்தில் எழுதிய 450 தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற சர்ச்சைக்குரிய தகவல் வெளியானது. இது தொடர்பாக தேர்வு வாரியம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

குரூப் 4 தேர்வு

தமிழகத்தில் TNPSC குரூப் 4 தேர்வில் தட்டச்சு பிரிவில் சுமார் 2000 காலிப்பணியிடத்திற்க்காக தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளனவா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் இத்தேர்வை எழுதிய ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 600 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீ – வனப்பகுதிகள் சேதம்… தீயை அணைக்கும் பணிகள் மும்பரம்!

இது தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் Member Secretary, TNPSC இதற்கான விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் TNPSC இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், TNPSC குரூப் 4 பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பிய பிறகு OMR தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு முறைகேடுகள் என புகார் கொடுக்கப்பட்டால், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் தட்டச்சு பணிக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது குறைவு தான் என விளக்கம் அளித்துள்ளது. ஒரே பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதால் முறைகேடு நடந்திருக்கும் என கூறுவது தவறு என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!