தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை குறித்த முழுமையான தகவலையும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தமிழகத்தில் இன்று (07.04.2021) மற்றும் நாளை (08.04.2021) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இயல்பான நிலையை விட அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இதனை தொடர்ந்து 09.04.2021 முதல் 11.04.2021 வரை குமரிக்கடல் பகுதியில் 1 கிலோமீட்டர் வரை வளிமண்டல சுழற்சி உருவாகவுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதியில் இடியுடன் கூடி லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் – புதிய துணைவேந்தர் நியமனம்!!
அதிகபட்ச வெப்பநிலையாக 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வாலிநோக்கம், வாலிநோக்கம் ARG (ராமநாதபுரம்) மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.