ஆன்லைனில் பணம் சம்பாரிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – A டூ Z விபரங்கள் இதோ!

0
ஆன்லைனில் பணம் சம்பாரிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - A டூ Z விபரங்கள் இதோ!
ஆன்லைனில் பணம் சம்பாரிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - A டூ Z விபரங்கள் இதோ!
ஆன்லைனில் பணம் சம்பாரிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – A டூ Z விபரங்கள் இதோ!

கொரோனா கால கட்டத்தில் பெரும்பாலானோர் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் சம்பாதிப்பதற்கான வழிமுறைகள் பல உள்ளன. இதில் உள்ள சிறப்பான வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமானோர் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். அத்துடன் வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தொழில் துறையில் வளர்ச்சி ஏற்படுவதால் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஏராளமான பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் வழியில் பணம் சம்பாதிக்க பல்வேறு இணைய தளங்கள் உள்ளது.

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் 1 பள்ளிகள் திறப்பு!

இதில் Chegg India, Freelance India, Freelancer, Upwork, Fiverr உள்ளிட்டவை 5 சிறப்பான இணையதளங்களாக செயல்படுகிறது. இதில் இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள் என யார் வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும். இதில் சம்பாதிக்க முதலில் தங்களின் பெயர், மின்னஞ்சல், நாட்டின் பெயர், கல்வி, பணி அனுபவம் மற்றும் நிபுணத்துவம் உள்ளிட்ட விவரங்களை மேலே குறிப்பிட்ட இணையத்தளத்தில் ஏதெனும் ஒன்றில் உள்ளிட்டு தங்களுக்கான கணக்கை உருவாக்க வேண்டும். அதன் பின்பு அந்த நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அதன்பின் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தங்களின் விருப்பத்திற்கேற்ற வேலைகளை தேர்ந்தெடுக்கலாம். இதில் வேலை பார்க்கும் கால நேரத்தை பொறுத்து ஊதியம் வழங்கப்படும்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – கைரேகை சரிபார்க்காமலே பொருட்கள் வாங்கலாம்!

மேலும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி அதன் மூலமாகவும் சம்பாதிக்கலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட துறையை தேர்வு செய்து வீடியோக்களை பதிவு செய்ய வேண்டும். தங்களுக்கு அதிக அளவிலான பின்தொடர்பவர்கள் இருந்தால் விளம்பர நிறுவனங்கள் தாங்களாகவே முன் வந்து அவர்களின் பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்று தங்களை அணுகுவார்கள். அந்த பொருட்களை விளம்பரப்படுத்தினால் தங்கள் கேட்ட தொகை நிறுவனங்கள் வழங்கும். மேலும் தங்களுக்கென்று வலைதளம் உருவாக்கி அதில் கதை, கவிதை உள்ளிட்டவை எழுதியும், யூடியூப் தளத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்தும் சம்பாதிக்கலாம். இதன் மூலமாக மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்க முடியும். மேலும் இது போன்று Amazon, Meesho உள்ளிட்ட பல வலைத்தளங்கள் உள்ளன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!