“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஐஸ்வர்யா தீபிகாவிற்கு விரைவில் திருமணம்? அவரே சொன்ன விளக்கம்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் ஐஸ்வர்யா தீபிகாவிற்கு விரைவில் திருமணம்? அவரே சொன்ன விளக்கம்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஐஸ்வர்யா தீபிகாவிற்கு விரைவில் திருமணம்? அவரே சொன்ன விளக்கம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜே தீபிகா. அவரிடம் எப்போது திருமணம் என ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார்.

விஜே தீபிகா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல ஒரு குடும்ப கதையுடன் ஒளிபரப்பாகி வருவதால் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த சீரியலுக்கு இருக்கின்றனர். பல முன்னணி நடிகர் நடிகைகள் அந்த சீரியல் கதாபாத்திரங்களுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். அதுவே இந்த சீரியல் வெற்றிக்கு காரணம் ஆகும். அண்ணன் தம்பிகள் பாசத்துடன் இருந்த குடும்பத்தை பிரிக்க வந்தவர் தான் ஐஸ்வர்யா கதாபாத்திரம். முதலில் இந்த கதாபாத்திரத்தில் வைஷாலி நடித்து வந்தார்.

அஜித்தின் ‘வலிமை’ தமிழ்நாட்டில் 4 நாட்களில் செய்த வசூல் சாதனை – ரசிகர்கள் உற்சாகம்!

அவருக்கு அடுத்தபடியாக களமிறங்கியவர் தான் விஜே தீபிகா, சந்தோசமாக சென்று கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் விரிசல் ஏற்பட காரணமே இவர் தான். கண்ணனும் ஐஸ்வர்யாவும் காதல் திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யாவாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் விஜே தீபிகா ஆனால் அவர் சீரியலில் இருந்து முகப்பரு பிரச்சனையால் விலகினார்.

தற்போது அதை எல்லாம் சரி செய்து செம அழகாக மாறிவிட்டார். இருந்தாலும் அவருக்கு சீரியல் வாய்ப்புகள் வரவில்லை என ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்து இருக்கிறார். மேலும் அவர் தனியாக குறும்படங்கள் இயக்கி நடித்து வருகிறார். சரவண விக்ரம் உடன் அவர் பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் எப்போது திருமணம் என்ற ரசிகர் ஒருவரது கேள்விக்கு அவர் விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் அழுது கொண்டே ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்க்கை நாடகமா என்ற பாடலை பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்களுக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!