அஜித்தின் ‘வலிமை’ தமிழ்நாட்டில் 4 நாட்களில் செய்த வசூல் சாதனை – ரசிகர்கள் உற்சாகம்!

0
அஜித்தின் 'வலிமை' தமிழ்நாட்டில் 4 நாட்களில் செய்த வசூல் சாதனை - ரசிகர்கள் உற்சாகம்!
அஜித்தின் 'வலிமை' தமிழ்நாட்டில் 4 நாட்களில் செய்த வசூல் சாதனை - ரசிகர்கள் உற்சாகம்!
அஜித்தின் ‘வலிமை’ தமிழ்நாட்டில் 4 நாட்களில் செய்த வசூல் சாதனை – ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் செய்துள்ள வசூல் சாதனையின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வலிமை வசூல்:

நடிகர் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான வலிமை படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதனால் வலிமை படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன அப்டேட்களும் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் அனைத்தும் தமிழகத்தில் வேற லெவல் வெற்றியை அடைந்தது. ஹெச்.வினோத் வலிமை படத்தை இயக்கியுள்ளார். போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். முதலில் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்த்த நிலையில், பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் “ராஜா ராணி 2” சீரியல் ஆல்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

பிப்ரவரி 24ம் தேதி அன்று வலிமை படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசானது. படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பலராலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. ரிலீசான நாள் முதல் வசூலில் சாதனையை படைத்து வருகிறது வலிமை. மிகவும் திறமையாக கதையை எடுத்திருப்பதாக இயக்குனருக்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. தற்போது படத்தின் 4 நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

‘பிக் பாஸ்’ அபிநய்க்கு மனைவியுடன் விவாகரத்து? அவரே சொன்ன அப்டேட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதன்படி, தமிழகத்தில் சென்னையில் மட்டும் வலிமை ரிலீஸ் ஆன 4 நாட்களில் 5 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு , தற்போது தமிழகம் முழுவதிற்குமான வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் வலிமை 4 நாட்களில் மொத்தம் 85 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து வலிமையின் வசூல் சாதனை குறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!