“அம்மாவையும் என்னையும் ரொம்ப அசிங்கமா திட்டுறாங்க” விஜே அர்ச்சனா மகள் ஆதங்கம் – வைரலாகும் பதிவு!

0
"அம்மாவையும் என்னையும் ரொம்ப அசிங்கமா திட்டுறாங்க" விஜே அர்ச்சனா மகள் ஆதங்கம் - வைரலாகும் பதிவு!
“அம்மாவையும் என்னையும் ரொம்ப அசிங்கமா திட்டுறாங்க” விஜே அர்ச்சனா மகள் ஆதங்கம் – வைரலாகும் பதிவு!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து பல நெகடிவ் கமெண்ட்ஸ் வரும் நிலையில் அது குறித்து அவரது மகள் சாரா பதிவு ஒன்றை வருத்தத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.

தொகுப்பாளினி அர்ச்சனா:

தமிழில் முன்னணித் தொகுப்பாளினியாக வலம் வருவபவர் விஜே அர்ச்சனா. அவர் முதன்முதலில் சன் டிவியில் இளமை புதுமை, காமெடி டைம் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அச்சுமா என செல்ல பெயருடன் வலம் வந்த அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நான்காவது சீசனில் கலந்துகொண்டார். தற்போது விஜய் டிவியில் சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மயூராவிடம் கோபியை பற்றி சொல்லும் தாத்தா, பாக்கியாவிற்கு உண்மை தெரிய வருமா? இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போதே பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். அது மட்டுமல்லாமல் அவரது யூடுப் சேனலில் பதிவிட்ட பாத்ரூம் டூர் வீடியோ அதிகம் சர்ச்சைகளை கிளப்பியது. அதனால் ஏகப்பட்டவர்கள் அர்ச்சனாவை கழுவி ஊற்றினார்கள். அவரை மட்டும் விடாமல் அவருடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர் மகள் சாராவை கூட விட்டுவைக்கவில்லை. அதன் பின் உடல்நிலை சரி இல்லாமல் இருந்த அவருக்கு பலர் ஆதரவு கொடுத்தனர்.

அதன் பின் மீண்டும் பல நிகழ்ச்சிகளில் களமிறங்கிய அவர், சமீபத்தில் தனது மகளுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். அப்போது அந்த ப்ரோமோ வீடியோவில் பல நெகட்டிவ் கமெண்ட் வந்தது அதை பார்த்த சாரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எங்களது குடும்பம் love மட்டுமே எதிர்பார்க்கும் ஆனால் இந்த அளவிற்கு திட்டும்படி நான் என்ன செய்தேன் என தெரியவில்லை, அதுவும் பெண்களை பேசக்கூடாத வார்த்தைகளில் திட்டுகின்றனர்.

விரைவில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் களமிறங்கும் புகழ் – இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

அவர்களில் பலர் பெண்கள் தான், நான் 2 குழந்தைகளுக்கு தாய் என பதிவிட்ட பெண்கள் கூட எங்களை திட்டுகின்றனர். அந்த அளவிற்கு நாங்கள் என்ன செய்தோம் என தெரியவில்லை. இருந்தாலும் எங்களுக்கு ஆதரவாகா இருப்பவர்களுக்கு தொடர்ந்து நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம். எங்களுக்கு உங்களுடைய ஆதரவை தொடர்ந்து கொடுங்கள் என சொல்லி வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here