விரைவில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் களமிறங்கும் புகழ் – இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விரைவில் 'குக் வித் கோமாளி' சீசன் 3ல் களமிறங்கும் புகழ் - இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
விரைவில் 'குக் வித் கோமாளி' சீசன் 3ல் களமிறங்கும் புகழ் - இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
விரைவில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் களமிறங்கும் புகழ் – இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த புகழ் சீக்கிரமாக கோமாளியாக கலந்து கொள்ள இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கோமாளி புகழ்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிகப்படியான மக்களின் கவனம் ஈர்த்து முதன்மையான இடத்தை வகித்து வருகிறது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. இந்த ஷோ முற்றிலும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டு வருவதால், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பலரது வாழ்க்கையில் முக்கியமான பங்காற்றி இருக்கிறது. ஷோவை பார்த்து கஷ்டங்களை எல்லாம் மறந்தவர்கள் என இதற்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உண்டு.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இல் இருந்து விலகும் கோமாளி பரத்? வெடித்த புதிய சர்ச்சை! ரசிகர்கள் விமர்சனம்!

அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக் ஆகட்டும், கோமாளிகள் ஆகட்டும் இதில் பலரும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இருந்து வாய்ப்புகளை பெற்று அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். இதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக் அஷ்வின் குமார், பவித்ரா, தர்ஷா குப்தா ஆகியோர் வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளனர்.

அதே போல கோமாளிகளாக கலந்து கொண்டு வந்த புகழ், ஷிவாங்கி, சக்தி, தங்கதுரை ஆகியோரும் சினிமாவில் பிசியாகி இருக்கின்றனர். இதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ‘குக் வித் கோமாளி’ புகழின் கைவசம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நிறைய திரைப்படங்கள் இருக்கிறது. இந்த திரைப்படங்களில் நடிப்பதற்காக அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கிறார் புகழ். இதற்கு மத்தியில் கடந்த வாரத்தில் இருந்து ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி துவங்கி இருக்கிறது.

இதில் ஏற்கனவே சொல்லப்பட்டதை போல புகழ் கோமாளியாக கலந்து கொள்ளவில்லை. அதாவது, சினிமா படங்களின் ஷெட்யூலை முடித்து விட்டு வர முடியாததால் புகழால் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் முதல் எபிசோடில் ரசிகர்கள் பலரும் புகழை மிஸ் செய்திருந்தனர். அந்த வகையில் என்னதான் புதிய கோமாளிகள் பலர் வந்தாலும், புகழின் டச் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இல்லை என கணித்துள்ள ரசிகர்கள், புகழ் எப்போது திரும்பவும் வருவார் என்று எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு ரீ என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் பிரியங்கா – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொள்ள இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. ஆனால், இவர் முழு சீசனிலும் கலந்து கொள்வாரா என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் ஸ்பெஷல் எபிசோடு அல்லது முக்கியமான எபிசோடுகளில் புகழ் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டு வருகிறது. என்றாலும் இந்த தகவல் தற்போது ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here