
கண்மணியின் சுயரூபத்தை தெரிந்து கொள்ளும் வெற்றி.. அபி உடன் சேருவரா? “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில், வெற்றி கண்மணியை திருமணம் செய்ய இருக்கும் நிலையில், கண்மணி செய்த வேலைகள் எல்லாம் வெளியே வர இருக்கிறது. மேலும் அபி வெற்றியிடம் உண்மையை சொல்ல வர பல ட்விஸ்ட்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது
தென்றல் வந்து என்னை தொடும்
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில், வெற்றியிடம் பல பொய்களை சொல்லி கண்மணி திருமண மேடை வரை வந்துவிட்டார். இந்நிலையில் அபி வெற்றியிடம் சித்தர் சொன்னதை நம்பி பேசலாமா என குழப்பத்தில் இருக்கிறார். இதற்கிடையே விஜி என்ன அபிக்கு கல்யாணம் நடந்ததாக சொல்கிறார்கள் என குழப்பத்தில் இருக்கிறார். அவர் சித்ராவிடம் உண்மையை சொல்ல, சித்ரா கண்மணியிடம் நியாயத்தை கேட்கிறார். ஆனால் கண்மணி சித்ராவை உண்மையை செல்லவிடாமல் தடுக்கிறார்.
இதற்கிடையே அபி வெற்றியிடம் பேசலாம் என நினைக்க ஆனால் அவரிடம் பேச முடியாமல் ஈகோ தடுக்கிறது. ஆனால் விஜி கண்டிப்பாக அபியிடம் பேச வேண்டும் என சொல்கிறார். அதனால் அபியும் கிளம்பி செல்கிறார். இனி வரும் எபிசோடுகளில் கண்மணி செய்த அனைத்து வேலைகளும் வெளியே வர இருக்கிறது. வெற்றிக்கு உண்மை தெரிய வர அபி உடன் சேருவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download