புலியுடன் போஸ் கொடுத்த விஜய் டிவி தொகுப்பாளினி – வைரலாகும் புகைப்படம்! குவியும் லைக்குகள்!

0
புலியுடன் போஸ் கொடுத்த விஜய் டிவி தொகுப்பாளினி - வைரலாகும் புகைப்படம்! குவியும் லைக்குகள்!
புலியுடன் போஸ் கொடுத்த விஜய் டிவி தொகுப்பாளினி - வைரலாகும் புகைப்படம்! குவியும் லைக்குகள்!
புலியுடன் போஸ் கொடுத்த விஜய் டிவி தொகுப்பாளினி – வைரலாகும் புகைப்படம்! குவியும் லைக்குகள்!

விஜய் டிவியில் ஆங்கராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பின் பிரபலமான சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஜாக்குலின். அவர் புலியுடன் தில்லாக எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நடிகை ஜாக்குலின்:

விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமானவர் ஜாக்குலின். நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்து ஆங்கராக வேண்டும் என்ற ஆசையால் இவர் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். காமெடி தொகுப்பாளினியாக அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் தொகுப்பாளராக இருந்த அவர் தேன்மொழி பிஏ சீரியல் மூலமாக கதாநாயகியாக களமிறங்கினார். அந்த சீரியலும் அவருக்கு ஏகப்பட்ட புகழை தேடி கொடுத்தது.

வெண்பாவின் சூழ்ச்சி வலையில் மீண்டும் மாட்டிக்கொண்ட பாரதி – சீரியலில் அடுத்த திருப்பம்!

மேலும் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் வந்து அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா எனும் திரைப்படத்தில் தங்கையாக நடித்திருந்தார். தற்போது யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வரும் அவர் புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். நடத்தரக் குடும்பத்தின் கனவு என அதில் அவர் பதிவிட்டிருந்தார். ஏகப்பட்ட ரசிகர்கள் அதில் அவருக்கு வாழ்த்துக்களை சொன்னார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியலை காப்பி அடிக்கும் மௌன ராகம் 2 – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இந்நிலையில் ஜாக்குலின் இப்போது எந்த நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்து கொள்ளவில்லை. அதனால் சமூக வலைத்தளங்களில் அவரை பலர் ஃபலோ செய்து அவருக்கு வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஜாக்குலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் புலி உடன் போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் ஜாக்குலின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலர் அந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!