
இரண்டாம் சுற்றிலும் வெற்றி பெற்ற முல்லை கதிர், பத்திரபதிவிற்கு ஏற்பாடு செய்யும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையும் கதிரும் இரண்டாம் சுற்றில் கலந்து கொண்டு ஒருவர் சமைத்த உணவு எது என்பதை கண்டுபிடித்து போட்டியில் வெற்றி பெறுகின்றனர். மறுபக்கம் ஜீவா பத்திரபதிவிற்கு தேவையான ஆவணங்களை கொடுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையும் கதிரும் இரண்டாம் சுற்று சமையல் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அதில் கணவன் சமைத்ததை மனைவியும், மனைவி சமைத்ததை கணவரும் கண்டுபிடிக்க வேண்டும். அதில் ஒவ்வொருத்தராக கலந்து கொள்கின்றனர். பின் முல்லை கதிரும் கலந்து கொள்ள இருவரும் விரைவாக கண்டுபிடித்து சொல்கின்றனர். மறுபக்கம் மற்றொரு போட்டியாளரும் கண்டுபிடித்துவிடுகின்றனர். பின் யார் வெற்றியாளர் என சொல்கின்றனர். அதில் முதலில் இருவர் தான் சரியான விடையை கண்டுபிடித்து இருப்பதாக தொகுப்பாளர் சொல்கிறார்.
அதில் ஒருவர் வினோத் ஜோடி என சொல்ல, கதிர் சரி நாம வீட்டிற்கு கிளம்புவோமா என கேட்கிறார். அப்போது தொகுப்பாளர் வினோத் தம்பதியை விட குறைவான நேரத்தில் கதிர் முல்லை தான் கண்டுபிடித்து இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றிருப்பதாக சொல்கிறார். மேலும் அவர்களுக்கு ரூ. 25000 பரிசு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் பேசிய முல்லை எனக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார். அதன் பின் மூன்றாவது சுற்று தொடங்க இருப்பதாக சொல்கின்றனர்.
தமிழகத்தில் நாளை (அக். 29) தொடங்கும் வடகிழக்கு பருவமழை – 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
மறுபக்கம் ஐஸ்வர்யா மீனாவிற்கு மசாஜ் செய்து விடுகிறார். அப்போது மீனா பயங்கரமாக கால் வலிப்பதாக சொல்ல, மீனா வீட்டிற்குள் செருப்பு போட்டால் கோவிலுக்குள் போட்டது போல நினைக்கிறார்கள் என சொல்கிறார். அப்போது ஜீவா வர தனத்தை கூப்பிடுகிறார். அப்போது ஐஸ்வர்யா மீனாவின் காலில் மசாஜ் செய்வதை பார்த்து ஜீவா மீனாவை கிண்டல் செய்கிறார். பின் தனம் வர ஜீவா பத்திரம் எல்லாம் தயாராகிவிட்டதாக சொல்கிறார். அப்போது மீனா ஜீவாவிடம் புலம்ப, அவர் கோவித்து கொண்டு செல்கிறார். பின் முல்லை நாம எல்லா போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதாக்ஸ் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்