விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவிற்கு நடந்த திருமணம் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யாவிற்கு நடந்த திருமணம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யாவிற்கு நடந்த திருமணம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவிற்கு நடந்த திருமணம் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதலில் ஐஸ்வர்யா வேடத்தில் நடித்து வந்த நடிகை வைஷாலி தனிகா மற்றும் சத்யதேவ் திருமண வீடியோவின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் புதுமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமண வீடியோ டீசர்:

விஜய் டிவியின் ஹிட் சீரியலான ‘ராஜா ராணி’ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் நடிகை வைஷாலி தனிகா. இவர் அறிமுகத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் கவனிக்கும் படி பிரபலமாகி விட்டார். அதை தொடர்ந்து பல்வேறு சீரியல்களிலும் நடித்து வந்தார். தற்போது சன் டிவியில் மகராசி, விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைக்குட்டி கண்ணனின் ஜோடியாக ஆரம்பத்தில் வைஷாலி தான் நடித்து வந்தார்.

தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட வருமான வரம்பு உயர்வு – ஜன.11 முதல் அமல்!

அதன் பின்னர், தனிப்பட்ட காரணங்களினால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு விலகி விட்டார். பின்னர் வைஷாலி கிட்டத்தட்ட 10 வருடங்களாக தான் காதலித்து வந்த தனது காதலர் சத்யதேவ் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண போட்டோக்கள் இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வந்தது. வைஷாலி தனக்கென்று தனியாக யூடூயூப் சேனலை நடத்தி வருகிறார். ‘வைஷாலி & தேவ்’ என்ற பெயரை தனது சேனலுக்கு வைத்துள்ளார். இதில், அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

பாக்கியா தொழிலில் வந்த புது பிரச்சனை, கோபியிடம் வருத்தப்பட்டு பேசிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

திருமணத்திற்க்கு பிறகு கணவருடன் கொண்டாடிய தல தீபாவளி, கார்த்திகை திருநாள் வீடியோ போன்றவற்றை தனது சேனலில் வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், தனது திருமணத்தின் வீடியோக்களை டீசராக சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு, “இது வெறும் டீசர் தான்” என்று தலைப்பை வைத்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ள திருமணத்தில் முழு வீடியோ எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை இந்த டீசர் தூண்டியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை புதுமண ஜோடிக்கு தெரிவித்து வருவதால் வீடியோ வைரலாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!