பாக்கியா தொழிலில் வந்த புது பிரச்சனை, கோபியிடம் வருத்தப்பட்டு பேசிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியா தொழிலில் வந்த புது பிரச்சனை, கோபியிடம் வருத்தப்பட்டு பேசிய பாக்கியா - இன்றைய
பாக்கியா தொழிலில் வந்த புது பிரச்சனை, கோபியிடம் வருத்தப்பட்டு பேசிய பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியா தொழிலில் வந்த புது பிரச்சனை, கோபியிடம் வருத்தப்பட்டு பேசிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் தந்தை பேசியதால் கோவமாக கோபி இருக்கிறார். நான் எதாவது தொழில் செய்தால் மட்டும் ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை என பாக்கியா வருத்தப்பட்டு பேசுகிறார். பின் பாக்கியா தொழில் புதிய பிரச்சனை ஒன்று வருகிறது.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா புதிய தொழில் தொடங்கியது குறித்து ராமமூர்த்தி பேச கோபி கோவமாக ரூமிற்கு வருகிறார். அப்போது பாக்கியா வர மீண்டும் கோபி திட்ட தொடங்கினார். அப்போது பாக்கியா நான் இதற்கு முன்னதாக சும்மா இருந்தேன் அப்போது என் நண்பர்களின் மனைவியை பாரு எப்படி சம்பாரிக்கிறார்கள் நீ எதுவும் செய்யவில்லை என குறை சொன்னீர்கள். அதனால் எனக்கு தெரிந்த சமையலை வைத்து எதோ செய்து வருகிறேன் அப்போதும் என்னை நீங்க திட்ட தான் செய்கிறீர்கள்.

அஞ்சலியை கடத்தியவனை நெருங்கி வந்த அகில், கண்ணம்மாவை இருட்டில் பார்த்து ரசிக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

முன்னாடி நான் எதுவும் செய்ததால் திட்டுனீங்க என நினைத்தேன் ஆனால் இன்று நான் என்ன செய்தாலும் திட்ட போறீங்க என தெரிந்து கொண்டேன். நான் புதிதாக எதோ செய்கிறேன் குடும்பத்தினர் அனைவரும் ஆதரவாக இருக்காங்க ஆனால் நீங்க அந்த இடத்தில் பிடிக்காமல் தான் இருந்தீங்க பாதியில் சென்றுவிட்டிர்கள் என சொல்கிறார். அது ஆபிசில் எனக்கு டென்ஷன் அதனால் தான் என கோபி சொல்ல, இதுவே நீங்க தொடங்கி இருந்தால் நான் எப்படி சந்தோசமாக இருந்திருப்பேன்.

அது போல நான் தொடங்கும் போது நீங்க ஏன் சந்தோசமாக இருப்பது இல்லை என பாக்கியா கேட்கிறார். நேற்று இன்று வந்தவர்கள் எல்லாரும் உன் புருஷன் எங்கே என கேள்வி கேட்டார்கள் ஆனால் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் என்றால் எனக்கே பதில் இல்லை என வருத்தப்பட்டு செல்கிறார். மறுநாள் ராதிகா வீட்டில் அவருடைய அம்மா கால் பற்றி கேட்கிறார். அதெல்லாம் சரியாகிவிடும் என சொல்ல, மயூரா நீண்ட நேரமாக போனை வைத்திருப்பதால் ராதிகா போனை வைக்க சொல்கிறார்.

தனம், மூர்த்தி நகை போடவில்லை என அசிங்கப்படுத்தும் ஜனார்த்தனன், பரிசு வாங்க செல்லும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பாக்கியா ஆன்டி தான் நேற்று எடுத்த புகைப்படங்களை அனுப்பினார். நேற்று நிகழ்ச்சி நன்றாக நடந்தது சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் மற்றும் ப்ரியா ராமன் வந்தார்கள் என சொல்ல உண்மையாகவா என ராதிகா கேட்கிறார். அப்போது மயூரா புகைப்படத்தை காட்ட, அதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார். பின் பாக்கியா புது இடத்தில் வேலைகளை தொடங்க அப்போது அந்த ஏரியா பெண்கள் சிலர் வந்து இந்த இடத்தில் ஹோட்டல் நடத்த கூடாது என சொல்கிறார்.

அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா வீட்டிற்கு வர ராமமூர்த்தி என்ன முகம் சோகமாக இருக்கிறது என கேட்க ஒரு சின்ன பிரச்சனை என பாக்கியா சொல்கிறார். அப்போது கோபியை பார்த்து உங்களிடமும் சொல்ல வேண்டும் என சொல்ல, எனக்கு அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என சொல்கிறார். அந்த இடம் வீடுகள் இருக்கும் இடம் அதனால சமைக்க கூடாது என பிரச்னை செய்வதாக சொல்கிறார். அதை கேட்டு கோபி இனி வேற வழி இல்லை பினிசஸ் நடத்த வேண்டாம் இழுத்து மூடு என சொல்கிறார்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ளோர் கவனத்திற்கு – ஒரு டிக்கெட் ரூ.1.5 கோடி! தேவஸ்தானம் ஏற்பாடு!

நேற்று வந்து அப்படி பேசுன, இன்னைக்கு பிரச்சனை வந்தால் நீயே பார்த்துக் கொள் என சொல்கிறார். எனக்கு பிரச்சனை வந்தால் அதை நானே பார்த்துக் கொள்வேன். ஆனால் உனக்கு எல்லாத்துக்கும் ஆள் வேண்டும் என சொல்கிறார். அதனால் தான் உன்னை பார்த்து சந்தோசப்பட முடியவில்லை இப்போ புரிகிறதா என கேட்கிறார். உன் பிரச்சனைகளை உன்னால் சமாளிக்க முடியும் என்றால் நீ பிசினஸ் பாரு என சொல்கிறார். பின் ராமமூர்த்தி இவன் எல்லாம் ஒரு ஆளு என திட்டுகிறார். நாளைக்கு நான் வருகிறேன் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!