விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையை சுற்றிவளைத்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா வெளியே செல்லும்போது ரசிகர்கள் சுற்றிவளைத்து செல்பி எடுத்துக்கொள்ளும்படியான வீடியோ சமூக வலைப்பக்கங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. மேலும், இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் தற்போது செயற்கை முறையில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கின்றனர். செயற்கை முறை கருவுறுதலுக்கு தேவையான 5 லட்சம் பணத்தை குடும்பத்தினர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி செலுத்துகின்றனர். மேலும், முல்லையின் சிகிச்சைக்காக வீடு கட்டும் பிளானையும் நிறுத்தியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
தற்போது முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சிகிச்சை கண்டிப்பாக வெற்றி பெறுமா, முல்லை கர்ப்பமுறுவாரா என்பது சந்தேகமே. சிகிச்சையை தொடங்கி ஒரு மாதத்திற்கு பிறகே வயிற்றில் குழந்தை தங்கியுள்ளதா அல்லது செயற்கை முறை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதா என்பதை அறிந்துகொள்ள முடியும். ஒரு வேளை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டால் மீண்டும் 5 லட்சம் கட்டி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் 5 லட்சம் கட்ட வேண்டும் என்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு முடியாத ஒன்றாகும்.
பாரதி கண்ணம்மா சீரியலில் அருணுக்கு பதிலாக நடிக்கும் ஆர்யன் – ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!
இதனால் எப்படியாவது சிகிச்சை வெற்றியடைந்துவிட வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவருமே பயத்தில் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் டிஆர்பியிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா சீரியல் போக போட்டோஷூட் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது காவ்யா வெளியே செல்லும்போது ரசிகர்கள் சுற்றிவளைத்து செல்பி எடுத்துக்கொள்கின்றனர். இவ்வளவு தூரம் சினித்துறையில் நடுத்தர குடும்ப பெண்கள் வருவது என்பது மிகப் பெரிய வரம் என கூறும்படியான வீடியோ வெளியாகியுள்ளது.