பழைய வீட்டை காலி செய்து விட்டு டி.நகரில் குடியேறிய ‘விஜய் டிவி’ மைனா – ட்ரெண்டான யூடுப் வீடியோ!

0
பழைய வீட்டை காலி செய்து விட்டு டி.நகரில் குடியேறிய 'விஜய் டிவி' மைனா - ட்ரெண்டான யூடுப் வீடியோ!
பழைய வீட்டை காலி செய்து விட்டு டி.நகரில் குடியேறிய 'விஜய் டிவி' மைனா - ட்ரெண்டான யூடுப் வீடியோ!
பழைய வீட்டை காலி செய்து விட்டு டி.நகரில் குடியேறிய ‘விஜய் டிவி’ மைனா – ட்ரெண்டான யூடுப் வீடியோ!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மைனா நந்தினி. அவர் புதியதாக ஒரு வீட்டிற்கு மாற இருப்பதாக வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

மைனா நந்தினி:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. அதன் பின் பல சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார். நந்தினியின் சொந்த ஊர் மதுரை ஆகும். அங்கே ஒரு லோக்கல் சேனலில் அவர் தொகுப்பாளராக பணியாற்றி தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதன் பின் சில சினிமா வாய்ப்புகள் மற்றும் விளம்பர படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் சென்னைக்கு வந்த அவர் ஒரு சில படங்களில் நடித்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட திருமண புகைப்படங்கள் – ரசிகர்கள் வாழ்த்து!

முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில், மனம் தளராமல் அவர் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதன் பின் 2019 ஆம் ஆண்டு யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான். தற்போது இந்த ஜோடி விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி சுற்றுவரை சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் மைனா விங்ஸ் என்ற யூடுப் சேனல் ஒன்றை இருவரும் நடத்தி வருகின்றனர். அவர்களின் நகைச்சுவையான வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு ஒன்றிணைந்த ‘செம்பருத்தி’ ஷபானா, ரேஷ்மா – புதுமண ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்து!

சமீபத்தில் புதிய வீடு மாற போகிறேன் என்று அவர் வெளியிட்ட வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி தன்னுடைய புகைப்படம், மகன் துருவனின் கியூட் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஆனால் தற்போது ட்ரெண்டாகி இருக்கும் இந்த வீடியோவை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் பலர் லைக் செய்தும் வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!